மனைவி கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது.
அவங்க எதிர்பார்ப்பு எல்லாமே ரொம்ப சிம்பிளா தான் இருக்கும்.
நாம தான் ஏதோ பெரிய பெரிய விஷயத்தை நெனச்சிகிட்டு இருப்போம்..
ஆனா அவங்க எதிர்பார்ப்பது…
முதல்ல நம்பிக்கை, அன்பு மற்றும் தாய்மைதான்.
எல்லாவற்றிலும் நம்பிக்கை கொடுங்கள்.
நம் துணையிடம் சொன்னால் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புங்கள்…
பாசம் கொடுப்பதில் பாரி வள்ளலாக இருக்க வேண்டும்…
அடுத்து அவங்க எதிர்பார்க்கிறது…
அரவணைப்பு..அவர்கள் வீட்டில் செல்லமாக வளர்ந்து இருப்பார்கள்..
நம்ம வீட்டில் அவர்கள் உள்ள கால சூழ்நிலை தெரிய சில காலம் ஆகும் அதுவரை அவர்களை குழந்தை போல அரவணைத்து
இது அப்படி அது இப்படி என்று சொல்லி கொடுத்து அரவணைக்க வேண்டும்..
அடுத்து
விட்டு கொடுத்தல்…
யாருக்கு விட்டுகொடுக்கிறோம்..
நம்முடைய துணை தானே என்று எண்ணுதல் வேண்டும்..
விட்டு கொடுப்பவர்கள் யாரும் கெட்டு போனதாய் சரித்திரம் இல்லை…
அதுக்கு அப்பறம் டெய்லியும் அவங்க நம்ம கிட்ட எதிர்பார்ப்பது…
• காலையில நமக்கு காபி கொடுக்கும் போதே…நீ காபி குடிச்சிட்டியா செல்லம்னு கேக்கனும்…
• சாப்பிடும்போது சமையலை பாராட்ட வேண்டும்…
தயவு செய்து யாருடன் ஒப்பிட்டு பார்க்காதீர்கள்..(பத்திரகாளி போல கோவம் வரும்)
• எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கனும்
• அலுவலகம் போகும் போது போயிட்டு வரேன் குட்டிமா அல்லது சின்ன பிலையிங்/ மவுத் கிஸ் ஒன்று கொடுக்கனும்..
• அலுவலகத்ல இருக்கும்போது மதியம் போன் பண்ணி சாப்பிடியானு கேக்கனும்..
• அலுவலகம் விட்டு வீட்டுக்கு வரும்போதே உனக்கு ஏதாவது வேணுமானு கேக்கனும்…
எதுவும் வேணாம் சொன்னாங்க அப்படினா மல்லிப்பூ மட்டும் வாங்கி வரலாம்..
• வீட்டுக்கு வந்த உடனே அலைபேசியை தூக்கி எறிந்து விட்டு அவங்க கிட்ட கொஞ்ச நேரம் மனசு விட்டு பேசணும்..
• சமைக்கிற அப்போ உதவி செய்யனும்.
(பின்னால நின்னு இல்லை ஹிஹிஹி..)
• முக்கியமான ஒன்னு நம் உடைகளை கண்ட இடங்களில் போட கூடாது. அந்த அந்த இடத்தில் வைக்கனும்.
• எக்காரணத்தை கொண்டும் பொண்டாட்டியை அடிக்க கூடாது....
குழந்தைகள் முன் சண்டை போட/ வாக்குவாதம் செய்யக் கூடாது
• அவர்கள் உடல் நலத்தில் அக்கறை கொள்ளுங்கள்..
• அவர்கள் கனவுக்கு உதவுங்கள்
பிறந்த நாள் திருமண நாள் தீபாவளி பொங்கல் இந்த நாட்களுக்கு ஆடை எடுத்து அவர்களுக்கு பரிசளியுங்கள்.
முக்கியமாக அந்த 3 நாட்களில் ஓய்வு கொடுங்கள்...
உளுந்த கஞ்சி அல்லது உளுந்து வடை வாங்கி கொடுத்து தலையை கோதி விட்டு நெற்றியில் ஒரு முத்தம் கொடுங்கள்.
அப்புறம் பாருங்கள் உங்கள் வீட்டில் சந்தோஷமும் குதூகலமும் குசலம் விசாரிக்கும். .
தலை/ மீசை நரைத்தாலும் வீட்டில் அன்யோன்யம் சிட்டு குருவியைபோல துள்ளி விளையாடும் .
நாம் ஒரு படி இறங்கினால் பெண்கள் இரண்டு படி இறங்குவார்கள்.
இப்படி இருந்து பாருங்கள் வீட்டில்... நீங்கள்தான் மன்மத ராசா!