Breaking News :

Friday, February 14
.

இன்றைய முக்கிய செய்திகள் - Today Top News - 24 October 2024


சென்னையில் இந்தியாவுக்கான #ஜப்பானின் கான்சுல் ஜெனரல் திரு.தகஹாஷி முனியோவுடன் ஒரு உருப்படியான கலந்துரையாடல் நடத்தினேன். நாங்கள் கலாச்சார உறவுகளை பற்றிய நுண்ணறிவு பரிமாறிக் கொண்டோம் மற்றும் பல்வேறு துறைகளில் ஆழமான ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய் எங்கள் கூட்டாணியை வலுப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து உற்சாகமாக இருக்கிறேன்.

Confederation of Indian Industry இன் அலுவலக உத்தியோகத்தர்கள் இன்று எம்மைச் செயலகத்தில் உள்ள எமது அறையில் ஒரு உபசார சந்திப்பிற்காக சந்தித்தனர்.
கல்வி, சுகாதாரம், நிலையான முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நமது மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசுடன் CII-யின் கூட்டுப்பணியை விவாதித்தோம்.

புதுமையான தீர்வுகளை ஆராயவும், தமிழக மக்களுக்கு பயனளிக்கும் கூட்டாணிகளை வலுப்படுத்தவும் இது ஒரு மதிப்புமிக்க வாய்ப்பு. ஆக்கபூர்வமான முயற்சிகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


டி.வி.எஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மதிப்பிற்குரிய திரு.வேணு சீனிவாசன் அவர்கள் மற்றும் திருமதி.மல்லிகா சீனிவாசன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இன்று நம்மை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் நடவடிக்கைகளால், தொழில் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குவதை எடுத்துரைத்து வாழ்த்திய திரு.வேணு சீனிவாசன் மற்றும் திருமதி.மல்லிகா சீனிவாசன் ஆகியோருக்கு என் அன்பும், நன்றியும்.
TVS

தமிழ்நாட்டின் இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் – வனங்கள் ஆகியவற்றில், அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் அரசின் துணையோடு மலையேற்றப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தையும், https://trektamilnadu.com இணையதளத்தையும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அவர்களின் உத்தரவின்பேரில் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் தொடங்கி வைத்தோம்.

மேலும், மலையேற்றத்திற்கு துணை நிற்கும் வனத்துறையின் வழிகாட்டிகளுக்கு Uniforms, Trekking Shoes, Cap, First aid box, Hot Water Flask, Stick, GPS கருவி உள்ளிட்ட மலையேற்ற உபகரணங்களை வழங்கினோம்.

இயற்கையின் மீது பிரியம் கொண்டோர், நம் அரசின் துணையோடு மலையேற்ற அனுபவத்தை பெற்றிட, இப்புதிய முன்னெடுப்பு நிச்சயம் உதவும். இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள என் அன்பும், வாழ்த்தும். @KPonmudiMLA #TrekTamilNadu

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.