மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் வரும்.முன் கோபத்தை தவிற்க்கவும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. உடல் நலம் சீராகும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். உத்யோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப வருமானம் உயரும். மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் புதிய முதலீடுகளால் நல்ல லாபத்தை தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, சுறுசுறுப்பாக காணப்டுவீர்கள் நெடு நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். புத்தி சாதுரியம் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிச்சியான சூழ்நிலை காணப்படும். சகாேதரர்களுக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் அகலும்.தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்று தீர்வுக்கு வரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, முக்கிய வேலைகளை பல அலைச்சலுக்கு பின் முடிக்க வேண்டி வரும் பழைய சிக்கலில் ஒன்று தீரும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பழைய நண்பரை சந்திக்க நேரும்.உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.பிரபலங்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரம் சீரான முறையில் செல்லும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வுகளுக்கான பேச்சுக்கள் நடைபெறும். மனதில் இருந்த குழப்பங்கள் அகலும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் நன்றாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வீட்டு பராமரிப்புச் செலவுகள் கூடும். கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசவும். புரளிகளை நம்பதீர்கள் தீர விசாரித்து முடிகள் எடுங்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தொழில் வியாபரங்கள் மிதமாக இருக்கம்.
தனுசு
தனுசு ராசி நண்ர்களே, மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பணம் சேமிப்பில் கவனம் செலுத்தவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரம் மந்தநிலை நீடிக்கும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். புது நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்களால் மனஸ்தாபம் வந்து நீங்கும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெறும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். யாருக்காகவும் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டாம் .எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். குடும்பத்தில் இருந்து வந்த மன ஸ்தாபங்கள் குறையும்.திறமையான செயல்களால் மதிப்பும் கூடும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.