Breaking News :

Saturday, June 10

பீன்ஸ் வைத்தியம்னா என்ன தெரியுமா?

ஆபரேசன் செய்து கொண்டால் மருத்துவ பிரச்சனைகளுக்குத் தீர்வு ஏற்படும்” என்று நமது உடலில் தோன்றும் பல பிரச்சனைகளுக்கும் மருத்துவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். இதற்கு சிறுநீரகத்தில் உருவாகும் கற்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு ஆபரேசன் செய்து நீக்கிவிட்டாலும், இதுவரை ஆபரேசன் செய்து கொண்டவர்களுக்கும், திரும்ப கற்கள் உருவாவதும், மீண்டும் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும், வழக்கமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
நிரந்தரமாக சிறுநீரகக் கற்களை ஆபரேசன் இன்றிக் கரைப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அது மிக எளிமையான வழியும் கூட. இதற்கு “பீன்ஸ் வைத்தியம் “என்று பெயர். பீன்ஸ் என்றால் சோயா பீன்ஸ் என்று புரிந்து கொள்ள வேண்டாம். ஆங்கிலக் காய்கறி என்று சொல்லக்கூடிய பீன்ஸ்.
சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதாக கூறுபவர்கள் கீழ்கண்டவாறு நாம் சொல்வதைக் கடைபிடித்தால் ஓரே நாளில் கற்கள் கரைந்து குணமடைந்து விடுவார்கள். பின்னர் “ஸ்கேன்” செய்து பார்த்தால் கூட அங்கு கற்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
அரைக்கிலோ பீன்சை எடுத்துக் கொண்டு அதில் உள்ள விதைகளை எல்லாம் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொண்டு நறுக்கிய பீன்சை அதில் போட்டு அடுப்பில் வைக்கவேண்டும். இளம் தீயாக எரிய விடவேண்டும். கியாஸ் அடுப்பை சிம்மில் வைத்து, அதை வேக வைக்க வேண்டும். அதாவது தீ கொஞ்சம் தான் எரிய வேண்டும். விறகு அடுப்பாக இருந்தாலும் நெருப்பு மிதமாக அதிலிருந்து வெளிப்படுமாறு வைத்துக்கொண்டு பீன்சை வேகவைக்க வேண்டும். சீக்கிரமாக அதுவேகாமல் இவ்வாறு இரண்டு மணிநேரம் கழித்து வெந்திருக்கக் கூடிய பீன்ஸையும், நீரையும் சேர்த்து மிக்சியில் போட்டு நன்கு கூழ்போல் அரைத்துக் கொண்டு, ஆறியபின் குடித்துவிடவேண்டும். இந்த பீன்ஸ் கூழைக் குடித்தவுடன் அந்தக் கணத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடித்துவிடவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் என்கிற அளவில் சிறிது சிறிதாக தண்ணீர் குடித்து விடவேண்டும். இவ்வாறு 3 மணிநேரத்திற்குள்ளாக 3 லிட்டர் தண்ணீரைக் குடித்து முடிக்கவேண்டும்.
அதன் பின்னர் சிறுநீர் கழிக்கும் பொழுதெல்லாம் அதை ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொண்டு கற்கள் அதில் வந்திருக்கிறதா? எனப் பார்க்கவேண்டும். எப்படியும் அன்று இரவுக்குள் சிறுநீரக கற்கள் வெளியேவந்துவிடும். அதுவரை வேறு எந்த உணவுகளும் எடுத்துக்கொள்ள கூடாது. அதன் பிறகு மூன்று மணி நேரத்திற்குப் பின் சாதரணமாய் குடிக்கும் நீரைவிட சற்று அதிகமாகக் குடித்துக் கொண்டே இருக்கவேண்டும். இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது அன்று முழுவதும் ஓய்வாக இருக்கவேண்டும். வேறு எந்த வேலையும் பார்க்கக் கூடாது. கண்களை மூடிப்படுத்துக் கொண்டு நன்கு ஓய்வாகவும், உடலும், மனதும் தளர்வாக இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட வழிமுறைகளுடன் செய்தால் சிறுநீரகக்கற்கள் கண்டிப்பாக கரையும். இந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி நிறையப்பேர் குணமடைந்திருக்கிறார்கள். எனவே சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு இந்த வழிமுறையைக் கையாண்டு ஆரோக்கியம் பெறலாம். சிறுநீரகக்கற்களைக் கரைப்பதற்கான வழிமுறைகளைப் பார்த்தோம். ஆனால் இதைவிடவும் சிறந்த வைத்தியம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால் சிறுநீரகக் கற்கள் ஏன் உருவாகிறது? அது உருவாகாமல் தடுப்பதற்கு என்ன வழி? என்பது தான் அது.
ஏசியைப் பயன்படுத்தவே கூடாது. கொசுவர்த்திச் சுருளில் உள்ள ரசாயான நச்சுக்கள் சுவாசத்தின் வழியே உள்ளே நுரையீரலுக்கு சென்று சிறுநீரகத்தில் கல்லாய் மாறுகிறது. எனவே கொசுவர்த்தியைப் பயன்படுத்தவே கூடாது. மனதில் பயம் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும். எனவே மனதில் உள்ள பயத்தைப் போக்கி சிறுநீரகக் கற்களைக் கரைத்துவிட முடியும்.
அடுத்ததாக நம் நாவிற்கு எந்தளவிற்கு உப்புச் சுவை தேவைப்படுகிறதோ அந்த அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். உப்பினைக் குறைவாகவும் எடுத்துக்கொள்ள கூடாது., கூடுதலாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உப்பில் தற்பொழுது பாக்கெட்டுகளில் வரும் உப்பினைப் பயன்படுத்த வேண்டாம். அதற்குப் பதில் கல் உப்பினைப் பொடி செய்து பயன்படுத்தலாம். கல் உப்பினை பயன்படுத்துவதற்கு முன், சட்டியில் போட்டு வறுத்துப் பயன்படுத்துவது மிகமிக சிறந்தது.
தண்ணீரின் தேவை நமது தாகத்தைப் பொறுத்து மாறுபடும். நாம் செய்யும் வேலை, தட்ப வெப்பநிலை போன்றவற்றைப் பொறுத்து தண்ணீரின் தாகம் நமக்கு இருக்கும். எனவே தண்ணீர் குறைவாகவும் குடிக்கக் கூடாது? அதிகமாகவும் குடிக்கக் கூடாது.
அதிகமாக பேசினால் கூட, சிறுநீரகத்தில் கற்கள் வரும். ஆசிரியர்கள், பேச்சாளர்கள், சொற்பொழிவாளர்கள், தொலைபேசி அழைப்பாளர்கள் போன்றோருக்கு சிறுநீரகத்தில் கற்கள் தோன்றும் வாய்ப்புகள் அதிகம். எவ்வளவு நேரம் அதிகளவு பேசிக்கொண்டு இருக்கிறோமோ, அந்த அளவுக்கு ஏற்ப சிறுநீரகத்தில் விரைவில் கற்கள் தோன்றும். அதிகநேரம் பேசிக் கொண்டிருப்பதை தொழிலாகச் செய்பவர்கள் இனிமேல் பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்..!!!

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.