Breaking News :

Friday, October 25
.

ராகு கால துர்க்கை அஷ்டகம் ஏன்?


வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உலகையீன்றவள் துர்க்கா உமையு மானவள்
உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
செம்மையானவள் துர்க்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்னமாயானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையு மானவள் இன்பத் தோணியானவள்
அன்பு ஊற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
குருவுமானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்க்கா யானவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
ராகுதேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகுகாலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகுதுர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் கனக துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெயதுர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே

இதனைப் பொதுவாக ராகு காலத்திலும், சிறப்பாக ஞாயிறு செவ்வாய்க்கிழமை  வெள்ளிக்கிழமை ராகுகாலத்திலும், அஷ்டமி திதியிலும், முடிந்தவர்கள் தினமும் பாடுவதால் மனசாந்தி, வாழ்க்கையில் வெற்றி ஏற்படும்.

ஸ்ரீ துர்க்கையம்மன் திருவடிகளே போற்றி

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.