Breaking News :

Monday, December 02
.

இறந்த பிறகும் சம்பாதிக்கும் நடிகைகள் யார்?


யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.. என்பது பழமொழி. யானைக்கு மட்டுமல்ல, சில உலக பிரபலங்களுக்கும் இது பொருந்தும். ஒருவேளை நமது பெற்றோர் அல்லது மூதாதையர்கள் நிறைய பணம் சம்பாதித்து வைத்திருந்தால், அதை வங்கியில் டெபாசிட் செய்து அதன் வட்டி மூலமாக வரும் பணத்தை வைத்து, இறந்து பிறகும் அவர்கள் மூலம் குடும்பத்திற்கு பண வருவாய் வருகிறது என்று நாம் குறிப்பிட முடியும். ஆனால், இதன் மூலம் பெரிதாக எவ்வளவு சம்பாதித்துவிட முடியும்.? ஆனால், மைக்கல் ஜாக்ஸன், மர்லின் மன்றோ, எலிசபெத் டெயிலர், ஏன் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூட இறந்து பல ஆண்டுகள் கழித்தும் இந்நாள் வரை சம்பாதித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள். சில வாரங்களாக ராயல்ட்டி தொகைக் கேட்பதற்காக இளையராஜாவை சிலர் வறுத்து எடுத்தனர். இதோ.. இந்த பிரபலங்கள் பல மில்லியன் டாலர்களில் இன்று வரை சம்பாதித்து வருவதற்கு காரணம் அதே ராயல்டி தான்.

இந்த லிஸ்டில் 2015ம் ஆண்டின் கணக்கு வழக்கின் ராயல்ட்டி மூலமாக டாப் 8 இடங்களை பிடித்திருக்கும் உலக பிரபலங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்...

#மைக்கல் ஜாக்சன்:

மைக்கல் ஜாக்சன் இறந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், அவரது இசையின் விற்பனை மூலமாகவும், அவரது இசையை பிற இடங்களில் பயன்படுத்துவதற்காகவும் பெறப்பட்டு வரும் பணம் மூலமாக இன்றும் அவர் சம்பாதித்துக் கொண்டே தான் இருக்கிறார்.

 

மைக்கல் ஜாக்சனின் குடும்பம் அவர் இறந்த பிறகும் கூட, அவர் மூலமாக வருவாய் ஈட்டிக் கொண்டு தான் இருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு மட்டும் லீகலாக மைக்கல் ஜாக்சன் 115 மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டியதாக அறியப்படுகிறது. இதன் இன்றைய இந்திய பண மதிப்பு 804 கோடி (8,04,13,75,000.00) ரூபாய் ஆகும்.

#எல்விஸ் ப்ரெஸ்லி:

எல்விஸ் ப்ரெஸ்லி ஓர் அமெரிக்க நட்கர் மற்றும் பாடகர். இவர் தனது 42வது வயதில் 1977ம் ஆண்டு மரணம் அடைந்தார். இவர் இறந்து 41 ஆண்டுகள் ஆகிறது. இவரது க்ராச்லான்ட் ஹோம் ஒரு சுற்றுலா தளமாக இயங்கி வருகிறது. இதை காணவே பலர் ஆண்டுதோறும் வந்து செல்கிறார்கள். இங்கே வந்து செல்ல கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.

 

இவரது வீட்டுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் மொத்த பணத்தின் அளவு மட்டும் மில்லியன் டாலர்களை தொடுகிறது. சுமாராக அடல்ட் ஒருவரிடம் 77 டாலர்கள் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு வரை வசூலான பணத்தின் மதிப்பு 55 மில்லியன் டாலர். இதன் இன்றைய இந்திய பண மதிப்பு 384 கோடி (3,84,75,52,500.00) ரூபாய் ஆகும்.

#சார்லஸ் ஷுல்ஸ்:

சார்லஸ் ஷுல்ஸ் ஒரு லெஜண்டரி கார்டூனிஸ்ட் ஆவார். இவர் நிறைய ஐகானிக் கார்டூன் கதாப்பத்திரங்களை படைத்திருக்கிறார். இவர் உருவாக்கிய கார்டூன்களில் மிகவும் பிரபலமானதாக கருதப்படுவது ஸ்நூபி தி டாக். இவர் இறந்து 18 ஆண்டுகள் ஆகிறது.

 

இவர் உருவாக்கிய கார்டூன் கதாப்பாத்திரங்கள் மூலமாக இன்னும் இவருக்கு வருவாய் வந்துக் கொண்டே தான் இருக்கிறது. 2015ம் ஆண்டு வரை இவர் இதன் மூலம் மூலமாக 40 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார். இதன் இந்திய பண மதிப்பு 279 கோடி (2,79,88,20,000.00) ரூபாய் ஆகும்.

 

#பாப் மார்லி:

பாப் மார்லி ஜமைக்காவை சேர்ந்து ஒரு இசை பாடகர் மற்றும் பாடலாசிரியர். இவர் கலாச்சாரம் சார்ந்து இசை அமைப்பதில் ஒரு ஐகானாக காணப்பட்டார். இவர் கடந்த 1981ம் ஆண்டு இறந்தார். இவர் இறந்து 37 ஆண்டுகள் ஆகிறது.

 

இவரது இசை இன்னும் இறக்கவில்லை, அது இன்றளவும் இவரது ரசிகர்களால் வேண்டி, விரும்பி கேட்கபப்ட்டு வருகிறது. தனது இசை ஆல்பங்கள் மூலமாக இவர் பல மில்லியன் இறந்த பின்னரும் வருமானமாக ஈட்டி இருக்கிறார். இவரது இசை ஆல்பம் 75 மில்லியன் பிரதிகள் விற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 2015ம் ஆண்டு வரை தனது இசை மூலம் 21 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார் பாப். இதன் இந்திய பண மதிப்பு 146 கோடி (1,46,82,15,000.00) ரூபாய் ஆகும்.

#எலிசபெத் டெயிலர்:

ஹாலிவுட்டின் அந்த காலத்து ஸ்டைலிஷ் ஐகான் நடிகை என்று இவரை குறிப்பிடலாம். அதே போல இவர் வரலாற்றில் எண்ணற்ற சர்ச்சைகளில் சிக்கிய நடிகையும் ஆவார். கிளியோபாட்ரா நடிகை எலிசபெத் டைலர் இறந்து ஏழு ஆண்டுகள் ஆகிறது.

 

ஆயினும், கடந்த 24 ஆண்டுகளாகஇவரது பெயரில் விற்கப்பட்டு வரும் பர்ஃபியூம் இன்று வரையிலும் அமோகமாக விற்பனை ஆகிவருகிறது. இதன் மூலமாக கடந்த 2015ம் ஆண்டு வரையிலான வருமானமாக மட்டும் எலிசபெத் டெயிலருக்கு 20 மில்லியன் டாலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. இதன் இந்திய பண மதிப்பு 139 கோடி (1,39,89,00,000.00) ஆகும்.

 

#மர்லின் மன்றோ:

அந்த காலத்து கவர்ச்சி கன்னி, லேடி சுப்பர் ஸ்டார், ஃபேஷன் ஐகான் ஹாலிவுட் என்று மட்டுமின்றி உலகம் முழுக்க தன் அழகினால் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய நடிகை இவர். இன்றளவும் ஃபேஷன் உலகில் மர்லின் மன்றோ என்ற பெயர் ஒரு மாபெரும் பிராண்டாக நீடித்து வருகிறது.

 

மர்லின் மன்றோ பிராண்ட் மூலமாக மர்லின் இறந்த பிறகும் அமெரிக்க ஸ்டோர்களில் மில்லியன் கணக்கான டாலர்கள் வருமானம் ஈட்டி வருகிறார். 2015ம் ஆண்டு கணக்கின் படி மர்லின் மன்றோ 17 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார். இதன் இந்திய பணமதிப்பு 118 கோடி (1,18,90,65,000.00) ரூபாய் ஆகும்.

 

#ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:

அறிவியல் வரலாற்றில் தியரி ஆப் ரிலேட்டிவிட்டி மூலம் யாராலும் மறக்க முடியாத தடத்தை பதித்து சென்றிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இவரது பெயர் மற்றும் தியரிகளை பயன்படுத்துவதற்காக இன்றளவும் நிறைய புத்தக வெளியீட்டாளர்கள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு ராயல்ட்டி வழங்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதன் படி பார்த்தால் கடந்த 2015ம் ஆண்டு வரையிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்த பிறகும் கூட 11 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார். இதன் இந்த பண மதிப்பு ஏறத்தாழ 77 கோடி (76,93,95,000.00) ரூபாய் ஆகும்

 

இதன் படி பார்த்தால் கடந்த 2015ம் ஆண்டு வரையிலும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் இறந்த பிறகும் கூட 11 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார். இதன் இந்த பண மதிப்பு ஏறத்தாழ 77 கோடி (76,93,95,000.00) ரூபாய் ஆகும்.

 

#பால் வாக்கர்:

இன்றளவிலும் பலரால் ஜீரணிக்க முடியாத மரணம் பால் வாக்கர். 40 வயதிலேயே கொடூரமான கார் விபத்து காரணமாக சம்பவ இடத்திலேயே உடல் கருகி மரணம் அடைந்தார் ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் திரைப்பட நடிகர் பால் வாக்கர். இறந்த பிறகும் கூட இவரது உருவத்தை திரைப்படத்தில் கிராபிக்ஸ் மூலம் பயன்படுத்தினர்.

 

இவர் 2013ம் ஆண்டு இறந்தார். 2015ம் ஆண்டு வரையிலுமான கணக்கின் படி பார்த்தால் தான் இறந்த பிறகும் கூட பால் வாக்கர் 10.5 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார். இதன் இந்திய பண மதிப்பு 73 கோடி (73,42,12,500.00) ரூபாய் ஆகும்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.