Breaking News :

Tuesday, November 05
.

‘தி ராஜா சாப்’ திரைப்படம் ஏப்ரல் வெளியீடு


மிகவும் எதிர்பார்ப்பிலிருக்கும் பான்-இந்தியா திரைப்படமான ‘தி ராஜா சாப்’ படத்தின் மீதான உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, தயாரிப்பாளர்கள் படத்தின் முன்னணி சூப்பர்ஸ்டாரான பிரபாஸின் பிறந்தநாளில்,  அவர் இடம்பெறும் அசத்தலான மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.  

ரசிகர்களுக்கு விருந்தாக பகிரப்பட்ட இந்த மோஷன் போஸ்டர், தற்போது இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது. முதல் முறையாக ஹாரர் காமெடி ஜானரில் பிரபாஸ் களமிறங்குகிறார். இது படத்தின் மீதான ஆவலை உச்சத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.

2 நிமிட மோஷன் போஸ்டர் காட்டின் நடுவில் பியானோவில் ஒலிக்கும் "ஹேப்பி பர்த்டே" ட்யூனுடன் துவங்குகிறது. பின்னர், ஒரு மர்ம உருவம் காடுகளில் சுற்றித் திரிவதைப் பிந்தொடர்ந்து, பார்வையாளர்களை விண்டேஜ் அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறது, அங்கு இறுதியாக பிரபாஸின் பிரமாண்ட தோற்றம் காண்பிக்கபடுகிறது. பழங்கால அரண்மனையின் பிரமாண்ட பின்னணியில், கறுப்பு உடையில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பிரபாஸை வெளிப்படுத்தும் இந்த போஸ்டர், சூப்பர் ஸ்டாரின் கவர்ச்சியை மிகச்சரியாகப் படம்பிடிக்கிறது.

ராஜாவாக உடையணிந்து, சுருட்டுப் பிடித்தபடி, பிரபாஸ் ஒரு சக்திவாய்ந்த, ஏக்கம் நிறைந்த அதிர்வை வெளிப்படுத்துகிறார், இது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த போஸ்டரில் "ஹாரர் இஸ் தி நியூ ஹ்யூமர்" என்ற டேக்லைனும், அதைத் தொடர்ந்து "ஹேப்பி பர்த்டே, ரெபெல் சாப்" என்பதும் இடம்பெற்றுள்ளது.

பிரபாஸ் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் போஸ்டரைப் பகிர்ந்து…, "இது திரில்லுடன் ஜில் செய்யும்  நேரம் இது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ட்விட்டரில் பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டார்கள். RajaSaab Birthday Celebrations என்ற ஹேஷ்டேக் உலகளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது, ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வழியே, பிரபாஸ் பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
தொடர்ந்து ஆக்‌ஷன் நிரம்பிய பாத்திரங்களில் மாஸாக வலம் வந்த  பிரபாஸ், முதல் முறையாக ஹாரர் -காமெடி ஜானரில், தி ராஜா சாப் மூலம் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார்.  

இந்த புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை, ரசிகர்கள் பரபரப்பாக பகிர்ந்து வருகிறார்கள், இந்த போஸ்டர் அவரது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு சரியான கிக்ஆஃப் ஆகும்.
இப்படத்தில் மாளவிகா மோகனன், நித்தி அகர்வால் மற்றும் ரித்தி குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தை இயக்குநர் மாருதி இயக்க, பீப்பிள் மீடியா ஃபேக்டரி பேனரின் கீழ் விஸ்வ பிரசாத் தயாரிக்கிறார், தமன் எஸ் இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.