Breaking News :

Friday, July 12
.

கலைஞர் நூற்றாண்டு விழா கலைஞர் 100


திரையுலகின் மற்ற   சங்கங்களுடன் இணைந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில்,  கலைஞர் அவர்கள் ஆற்றிய  மகத்தான சாதனைகளை அவரது நூற்றாண்டில் கலைஞர்-கலைஞர் 100 எனும் மிக பிரம்மாண்டமான விழாவாக வரும் 24.12 .2023 ( ஞாயிறு) அன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

  கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் திரையுலகில் கதாசிரியராக, வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக அவர் எழுபத்து ஐந்து படங்களில் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்துள்ளார்.

  நேரடி தமிழ் திரைப்படங்களுக்கு தமிழில் படத்தலைப்பு வைத்தால் கேளிக்கை வரி ரத்து செய்து உதவினார். அரசாங்க இடங்களில் படப்பிடிப்பு நடத்தினால் பாதி கட்டணம் என்று அறிவித்தார். மேலும், திரைப்பட மானிய தொகையினை வருடந்தோறும் வழங்கினார். ஐந்து முறை அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்தார்.

   தனது வசனத்தால் மக்களின் சிந்தனையை தூண்டிவிட்டார். அவர் வசனம் எழுதிய ஒவ்வொரு  படத்தின் துவக்கத்திலும் அவர் பேசும் பேச்சை கேக்கவே திரையங்கு நோக்கி ஏராளமான மக்கள் வந்தார்கள்.

    அகில இந்திய அளவில் தெலுங்கு கன்னடம், பெங்காலி, மலையாளம், இந்தி மராத்தி, ஒரியா, குஜராத்தி,  என பல மொழி திரைப்பட கலைஞர்களை இந்த விழாவில் கலந்து கொள்ள வருமாறு அழைப்பு விடுக்க உள்ளோம்.

    கலைஞர் வசனம் எழுதிய படங்களில் இருந்து பல்வேறு காட்சிகள் நேரடியாக நடித்து காட்ட திரைப்பட நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.

   இந்த மாபெரும் விழாவில் முதல்கட்டமாக கலைஞானி கமலஹாசன் அவர்களும் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும்  , இசைஞானி இளையராஜா அவர்களும்  கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளார்கள்

    மேலும் இந்த விழாவில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள்  என பலரும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.

     சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் குறைந்த பட்சம் 35000 பேர் இந்த விழாவினை அமர்ந்து பார்க்கும் வண்ணம் மேடை அமைக்கப்பட உள்ளது. 

    இந்த மாபெரும் விழாவில் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

     நடனம், நாடகம், இசைக்கச்சேரி, ஒலி, ஒளி காட்சிகள், ட்ரோன்கள் படையெடுப்பில் கண்கவர் நிகழ்ச்சிகள் மேலும் பல வித்தியாசமான நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவரும் வண்ணம் உருவாக்கி வருகிறோம்.

இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும், திரைக்கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்க இருப்பதால் அடுத்த மாதம் (டிசம்பர்) 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள்  தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் உட்பட திரை உலக வேலைகள் எதுவும் நடைபெறாது. 

   இந்த மாபெரும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் அவர்களும், மற்றும் மத்திய, மாநில அமைச்சர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.இந்த மாபெரும் விழா குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்கள் அனைத்தும் திரை உலகினருக்கும், பொதுமக்களுக்கும்
விரைவில் அறிவிக்கப்படும்." என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ்
இணைச் செயலாளர்
எஸ்.சவுந்தர பாண்டியன்
மற்றும் 
திரு.கலைப்புலி எஸ். தாணு
திரு.ஆர்.கே.செல்வமணி
திரு.பேரரசு
திரு.அருள்பதி
திரு.கே ராஜன்
திரு.டி.ஜி.தியாகராஜன்
திரு.டி சிவா
திருமதி.லதா
திருமதி.லலிதகுமாரி
திரு.பசுபதி
திரு.பிரேம்
திரு.சிவசக்தி பாண்டியன்
திரு.சித்ரா லட்சுமணன்
திரு.தனஞ்செயன்
திரு.சுரேஷ் காமாட்சி
திரு.கே.எஸ்.சீனிவாசன்
அன்பாலயா பிரபாகரன்

திரு.ஞானவேல்
திரு. ஹேமசந்திரன்
திரு. சௌந்தர் நடிகர்

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் 

திரு.ஹெச் முரளி
திரு. கபார் 
திரு.திருமலை
திரு.ஜே.சுரேஷ்
திரு. பிரவீன் காந்தி
திரு.பெப்சி விஜயன்
திரு.பழனிவேல்
திரு.அண்புதுரை
திரு.ஏ.எல்.உதயா
திரு.ராமச்சந்திரன்
திரு.கமலக்கன்ணன்
திரு.ஜி.எஸ். முரளி
திரு.சாலை சகாதேவன்
திரு.ரஞ்சித்குமார்
திரு.ராஜா


பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் தலைவர் திரு.என்.விஜயமுரளி
திரு.டைமண்ட் பாபு
திரு.ஜான்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.