Breaking News :

Monday, December 02
.

‘எ சாங் வித்அவுட் நேம்’ மூவி விமர்சனம்


சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் மிக மோசமாக திரையிடப்பட்ட படம்  ‘எ சாங் வித்அவுட் நேம்’. 
வெண்பனி படர்ந்த மலைசாரலில் ஒர் வீட்டை அதிகாலையில்  படம் பிடித்து குறியீடாக அடிக்கடி காட்டி இருக்கிறார்  இயக்குநர் மெலினா லியொன்.
கேசினோ திரையரங்கில் 2கே ரிசல்யூசன் உள்ள உலகின் அதி சிறந்த புரஜக்டர்களில் ஒன்றான பார்கோ புரஜக்டரால் கூட அக்காட்சியை இயக்குநர் படம் பிடித்த தரத்தில் ஒளிபரப்ப இயலவில்லை.
காரணம் தரம் குறைந்த பிரதியை இணையத்தில் தறவிரக்கி விஎல்சி ப்ளேயரில் ப்ளே செய்து புரஜக்சன் செய்யப்பட்டது.
இயக்குநர் மட்டும் திரையிடலுக்கு வந்திருந்தால் இந்த தரத்தில் படத்தை திரையிடவே அனுமதித்து இருக்க மாட்டார்.
கேரளாவாக இருந்தால் பார்வையாளர்களே கத்தி கலாட்டா செய்து திரையிடலை நிறுத்தி இருப்பார்கள்.
சென்னை பார்வையாளர்கள், குறியின் மேல் குப்புற கவிழ்ந்து குண்டலினி யோகம் செய்யும் குண்டூசிகள்.
குசு கூட விடமாட்டார்கள்.

நான் ஐந்துக்கும் மேற்பட்ட படத்துக்கு முறையிட்டு பலன் இல்லாததால் அலுத்து விட்டேன்.
ஒரு கட்டத்தில் கோவணத்தை அவிழ்த்து எறிந்து விட்டு நிர்வாணக்கூட்டத்தில் ஐக்கியமாகி விட்டேன்.
இப்போதும் ஒவ்வொரு பதிவிலும் என் ஆதங்கத்தை பதிவு செய்யக்காரணம் அடுத்த ஆண்டாவது விடிய வேண்டும் என்ற உயரிய நோக்கம்.
முகநூலிலாவது என்னோடு இணைந்து 'கூவுங்கள் சேவல்களே...செந்நிறக்கொண்டைகளே!'.

சகித்துக்கொண்டு பார்த்த சலிக்காத காவியம்‘எ சாங் வித்அவுட் நேம்’. 
கருப்பு-வெள்ளையில் காட்சியளித்த அனைத்து சட்டகங்களையும் பிரேம் போட்டு ஒவியக்கண்காட்சியில் வைத்து விடலாம்.

பெரு நாட்டில் மோடி போன்ற ஒரு ஆட்சியாளன் அதிகாரம் செலுத்திய காலத்தில் பயணிக்கிறது படம்.
விளிம்புநிலை மக்களை மூத்திர சந்தில் சாத்துவதே சாத்திரம்...
அதுதான் சாத்தியம் என்னும் நடுநிலை நக்கிகள் நாட்டியமாடும் காலத்தில் கர்ப்பவதி ஆகிறாள் நாயகி.
நடைபாதையில் கடை போட்டு அரை வயிற்றை நிரப்பும் ஆதிவாசி அவள்.
வந்தேறிகள் அரசாட்சி 'ஆதார் இருக்கிறதா?' 'பூர்விகக்குடி என்பதற்கு பத்திரம் இருக்கிறதா?' என மிரட்டுகிறது.
'பிரசவத்திற்கு இலவசம்' 'நாங்க இருக்கிறோம்' 'எங்ககிட்ட வாங்க' என அதிரடியாக முழங்குகிறது வானொலி.
நம்பி போகிறாள் நாயகி.
குழந்தை பிறக்கிறது.
அழுகுரல் கேட்கிறது.
ஆரோக்கியமாக இருக்கிறது.
'இன்று போய் நாளை வா' 'குழந்தை பத்திரமாக வைத்திருக்கிறோம்' என நைச்சியமாக அனுப்பி விடுகிறார்கள்.
மறுநாள் போனால் மருத்துவமனை மாயமாகி விட்டது!...
பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் மறைந்த பொருளாதாரம் போல!!.

காவல்துறையிடம் போகிறாள்.
'கஞ்சிக்கு வழியில்லாதவளே...வங்கி கணக்கில் கோடிகளை குவித்திருக்கும் கோமான் வீட்டில் குடியிருக்கிறது வாரிசாக!.
பொத்திக்கொண்டு போ' என குரைக்கிறது எலும்புத்துண்டை கவ்விய ஜந்து.

ஓடவும் இல்லை,ஒளியவும் இல்லை.
போராடுகிறாள்.
கை கொடுக்கிறான் 'ஊடகவியலாளன்'.
இறுதிக்காட்சி வரை உறுதியோடு போராடுவதுதான் திரைக்கதை.
முற்றுப்பெறாத போராட்டத்தோடு முற்றுகிறது படம்.

விரக்தியின் உச்சத்தில் உச்சஸ்தாயில் பாடுகிறாள் தாய்.
அந்தப்பாடல் வரிகளில் வலிகள் வரிசை கட்டி வருகின்றது.
நம் உயிரை உலைத்துப்போடுகிறது ‘எ சாங் வித்அவுட் நேம்’.  

Song Without a Name (Spanish:  sin nombre) is a 2019 Peruvian drama film directed by Melina León. 
It was screened in the Directors' Fortnight section at the 2019 Cannes Film Festival.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.