தற்போது தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் உடலுக்கு தீங்கு விளைவிப்பவை.
முன்னோர்கள் பயன்படுத்திய செம்புப் பாத்திரங்கள் நூறு சதவீதம் உடலுக்கு நன்மைகளை தருபவை. அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
** செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் அழியும்.
** செம்பில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படும்.
** ஆண்களுக்கு ஆண்மையை குறையாமல் இருக்கும்.
** வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக ஒழிக்கும்.
** தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற, செம்புப் பாத்திரங்கள் உதவுகிறது.
** செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் பருகினால் மூட்டு வலி குறையும்.
** செம்பு நம் உடலில் செல்கள் புதிதாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். உடலில் ஏற்படும் காயங்களை குணமடையச் செய்கிறது.
** மூளையில் நியூரான்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறது.
** செம்பில் தண்ணீரை பருகினால் செரிமானப் பிரச்சனை நீங்கும்.
** சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் உற்பத்தி செய்யவும், இரத்த சோகை வராமல் இருக்கவும் உதவும்.
** பிரசவக் காலங்களில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.
** புற்றுநோயை உருவாக்கும் கிருமிகளை வராமல் தடுக்கும்.
** செம்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சருமத்தின் முதிர்ச்சி தன்மையைக் குறைத்து இளமையாக வைத்துக் கொள்ளளும்.