Breaking News :

Sunday, April 28
.

விராலிமலையில் உள்ள முருகன் கோவிலில் கொடியேற்றம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை முருகன் கோவில் வைகாசி திருவிழாவானது ஆண்டும்தோறும் 11 நாட்கள் நடைபெறும். இதேபோல், இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக திருவிழாவை நேற்று தொடங்கியது. இதில், சுப்பிரமணியசுவாமி, வள்ளி- தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமி முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியர்கள் முருகன் கொடி ஏற்றி வைத்து ரக்‌ஷாபந்தனம் என்ற காப்பு கட்டப்பட்டது. 

அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு வேளைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிக்குதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இந்த நிகழ்ச்சி 11 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 12-ந் தேதி காலை 9.30 மணியளவில் நடக்கிறது. 

அதனை தொடர்ந்து 13-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 14-ந் தேதி விடையாற்றியுடன் வைகாசி திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், சிவாச்சாரியர்கள், மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

 


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.