Breaking News :

Tuesday, May 07
.

ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முகூர்த்தக்கால்


ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை  தேர் திருவிழா (விருப்பன் திருநாள்) வரும் 28.04. 2024 ஞாயிற்றுக்கிழமை காலை கொடி ஏற்றத்துடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 06.05.2024 திங்களன்று காலைSri Rangam Chithirai Theru MukurthakkalSri Rangam Chithirai Theru Mukurthakkal6 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக இவ்விழாவை முன்னிட்டு இன்று (26.04.2024)  பகல் 12.15 மணிக்கு கீழ சித்திரை வீதியில் உள்ள சித்திரை தேருக்கு சிறப்பு பூஜைகளுடன் "ஸ்தம்ப ஸ்தாபனம்" எனப்படும் முகூர்த்தக் கால் நடும் வைபவம் நடந்தது.

 

தேர் முகூர்த்த கால் நடுதல் நிகழ்வை ஸ்ரீரங்கேச புரோஹித என்ற வார்த்தைக்கு உரியவரான கோவில் புரோஹித வாத்தியார் ஸ்வாமியும், ஸ்ரீரங்கம் கோவில் ஸ்தலத்தாரும், ஸ்வாமி ஸ்ரீகூரத்தாழ்வார் திருக்குமார வம்சத்தில் அவதரித்தவரும், பெரியபெருமாள் அரவணை பிரசாதத்தால் அவதரித்ததால் ஸ்ரீரங்கநாத ஸ்வாமியின் புத்திரருமான ஸ்ரீவேதவ்யாஸ பட்டர் வம்சத்தில் இன்றளவும் 37 வது தலைமுறையாய் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் கோவில் ஸ்ரீவேதவ்யாஸ செந்தாமரைக்கண்ணன் பட்டர் ஸ்வாமிகள், கோவில் பெரியநம்பி ஸ்வாமிகள் உடனிருக்க நடத்திவைத்தார். உடன், கோவில் மணியக்காரர், இணை ஆணையர், உள்துறை கண்காணிப்பாளர், கோவில் மஹாஜனம் மற்றும் கைங்கர்யபரர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.