Breaking News :

Wednesday, December 04
.

நவகிரகத்தில் அமர்ந்துள்ள குருவுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் என்ன வேறுபாடு?


பொதுவாக விருட்சத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி சிவரூபம் ஆனவர். 

பிரமனுடைய புத்திரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரரர் இவர்களுக்காக 
ஞான மார்க்கத்தை கற்று தர வேண்டி, பிரம்மனின் வேண்டு கோளுக்கிணங்க! சிவபெருமானால் எடுக்கப்பட்ட அவதாரம்தான் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தி. 

இவர் ஞானத்தின் வடிவானவர். 
இந்த கலியுகத்தில் வாழ  தகுதியான  ஆத்மஞானத்தையும், ஆழ்ந்த அறிவாற்றலையும் பூமியில் வாழக்கூடிய மனிதர்களுக்கு எந்தவிதமான நிர்ப்பந்தமும் இல்லாமல் கொடுக்கக்கூடிய (நம்முடைய கண்ணோட்டத்தில் இலவசமாக) இரு தெய்வங்கள் உண்டு. 

ஒருவர் தக்ஷிணாமூர்த்தி,  மற்றொருவர் பழனி மலையில் அமர்ந்திருக்கும் முருகப்பெருமான். 

பொதுவாக தட்சிணாமூர்த்தியை வழிபடும் முறைகளை பற்றி பார்த்தோமே... என்றால் மற்ற கடவுள்களை வழிபடுவது போல் இல்லாமல் தென்முகக் கடவுளை நேருக்கு நேர் நின்று நம்முடைய கண்களை அகல திறந்து அவருடைய நெற்றிப்பொட்டை  பார்த்து வழிபடுவது நல்லது. 

இந்த முறையில் வழிபட்டால் ஆழ்ந்த ஞானம் என்பது  விருட்ச்சத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தென்முகக் கடவுள் தக்ஷிணா           மூர்த்தியிடமிருந்து நீங்கள் பெற்றுக்
கொள்ளலாம். 

வெண்மை நிறத்தை தன்னகத்தே கொண்டவர்.

குரு பெயர்ச்சி அன்று நவகிரகங்களில் பெயர்கின்ற  குரு இவர் அல்ல. 

சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவரின் மகன் தான் நவகிரகங்களில் அமர்ந்திருக்கும் வியாழபகவான். 

சிறு வயதிலேயே கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கியபடியால் சிவபெருமானால் நவகிரக குரு என்ற பட்டத்தை பெற்று, அனைவராலும் அன்புடன் குரு என்று அழைக்கப்படுபவர் தான் நவகிரகத்தில் அமர்ந்திருக்கும் வியாழபகவவான். 

குரு பெயர்ச்சி அன்று ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு பெயர்கிறவர்தான் இந்த குரு பகவான். 

குரு பெயர்ச்சி அன்று அர்ச்சனை செய்ய உகந்தவரும் இந்த குரு பகவான்தான். மஞ்சள் நிறத்திற்க்கு சொந்தகாரர். 

என்னைப்போல் கடைசி பெஞ்சு மாணவர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால் கீழ்வரும் வாக்கியத்தை உங்களுக்கு புரிந்து கொள்கிற மாதிரி எழுதுகிறேன். 

மேற்சொன்ன விஷயங்கள் எப்படி இருந்தாலும் தென்முகக் கடவுள் தட்சிணாமூர்த்தியும், நவகிரகத்தில் அமர்ந்திருக்கும் குருபகவானும் தோற்றத்தில் வேறுபட்டாலும், குணங்களில் ஒன்று பட்டவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. 

ஆகையால் கதையை விடுங்கள், 
கதையில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

இனி குரு பகவானுடைய தன்மைகளை பற்றி பார்க்கலாம்.

 

 குரு பகவானுக்கு புத்திரகாரகன் என்றும், தனகாரகன் என்றும் சொல்வதுண்டு. 

ஜாதகருக்கு புத்திரபாக்கியம் உண்டா? இல்லையா? என்பதை பற்றி ஆராய உங்கள்ஜாதகத்தில் குரு அமர்ந்திருக்கும்  நிலையைப் பற்றியும் ஆராய வேண்டும்.

அதேபோல் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அடிப்படை வருமானம் என்பது உங்கள் சுயஜாதகத்தில் குருவினுடைய நிலையை பொறுத்தே அமையும். 

குருபகவானுக்கு என்று ஒரு தனித்தன்மை உண்டு. குரு தான் அமரும் ராசியை விட பார்க்கும் ராசிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார். 

குருபார்வை பெறும்  ராசிகள் மிகுந்த சுபத்தன்மை வாய்ந்ததாக கருதப்படும். 

ஆண், 
பெண் இருபாலரின் திருமணத்திற்கும் "குருபலம்" என்பது மிகவும் அவசியமான ஒன்று. 

இத்தனை நல்லவராக விளங்கும்  குருபகவானுக்கு மற்றொரு முகம் என்று ஒன்று உண்டு. அனைத்து நவகிரகங்களிலேயே  முழுமையான சோம்பேறி கிரகம் என்ற பெயரை பெற்றவரும் இதே குருபகவான் தான். 

உங்களது சுய ஜாதகத்தில் குருபகவான் அமர்ந்திருக்கும் ராசியை மிகுந்த கவனமுடன் ஆராயவேண்டும். குருபகவான் எப்பொழுதுமே தன்னுடன் சேர்ந்து இருக்கும் கிரகத்தை தூண்டிவிட்டு தான் அமைதியாக இருக்கும்  குணத்தை பெற்றவர். 

ஒரு ராசியில் தனித்து அமர்ந்த குரு அந்த ராசியின் பலாபலன்களை முழுவதுமாக கெடுத்து விட வாய்ப்புண்டு. 

இதுனால் தான்  குரு அமரும் இடத்தைவிட பார்க்கும் பார்வை சிறப்பானது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். 

முக்கியமாக  மிதுனலக்னத்தில் பிறந்தவர்கள் உங்கள் திருமணத்திற்கு முன்பு 
குரு அமர்ந்திருக்கும் ராசியை மிகவும் கவனமாக  உங்கள் சுய ஜாதத்தில் ஆராய வேண்டும்.  ஏனென்றால் மிதுன லக்னத்திற்கு கேந்திர ஸ்தானத்தில் குரு அமர நேரிட்டால் அதுவும் தனுசு ராசியில் குரு பகவான் தனித்து அமர நேரிட்டால்! நிச்சயம் உங்களுக்கு திருமணதடை ஏற்படுத்துவார்.
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த விதி பொருந்தும்.

குரு ஆண் கிரகம். சமஸ்கிருத பாஷைக்கு சொந்தக்காரர். பிராமண ஜாதி. வடகிழக்கு திசை, மஞ்சள் ஆகியவற்றிற்கு உரித்தானவர். 
தானியம் - கடலை 
ஸ்தலம் - ஆலங்குடி, திருச்செந்தூர், திட்டை. 

கடகத்தில் உச்சமும், மகரத்தில் நீசமும், ரிஷப, துலா ராசியில் பகையும் பெறுகிறார். 

தான் அமர்ந்த ராசியிலிருந்து 5 7 9-ஆம் பார்வையாக குரு பார்வை பதியும்  ராசிகள் மிகவும் சுபத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.