கனடாவில் நடைபெற்ற fidechesscandidates2024-ல் சாம்பியன் பட்டம் வென்று, FIDE Chess World Championship-ல் பங்கேற்கவுள்ள தம்பி D Gukesh -ஐ பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக ரூபாய் 75 லட்சத்துக்கான காசோலை மற்றும் நினைவுப்பரிசை வழங்கிய நிகழ்வில் உடன் பங்கேற்றோம்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீரரான தம்பி குகேஷ், மிக இளம் வயதிலேயே செஸ் போட்டியில் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளார்.
FIDE Chess World Championship-ல் வெற்றி வாகைசூடி தமிழ்நாட்டிற்கும் – இந்திய ஒன்றியத்துக்கும் பெருமை தேடித்தர, தம்பி குகேஷை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து வாழ்த்தினோம்.
Sports Development Authority of Tamilnadu Atulya Misra Ias #jmeghanathareddyias