கொடைக்கானலுக்கு குடும்பத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்றார்.
அங்கு வரும் மே 4ம் தேதி வரை அவர் அங்கு தங்கி இருப்பார் என்று கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் சென்றார்.
பின்னர் மதுரையில் இருந்து காரில் அவர் புறப்பட்டு கொடைக்கானலுக்கு சென்றார். முதல்வர் வருகையையொட்டி கொடைக்கானல் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள், சுற்றுலா தலங்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் முதல்வர் வருகையையொட்டி இன்று முதல் வருகிற மே 4ம் தேதி வரை கொடைக்கானலில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் பகுதிகளில் டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை விதித்து திண்டுக்கல் எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.