Breaking News :

Monday, April 29
.

ஆஞ்சநேயரை வழிபடுவது எப்படி ?


ஆஞ்சநேயரை வணக்கும் அடியவர்கள் ‘ ஸ்ரீ ராம ஜெயம் ‘   கூறுவதன் மூலம் ஆஞ்சநேயரின் பேரருளை மிக எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.இன்று 24/8/2021 செவ்வாய்க்கிழமை வழிபடுவோம் 

ஒரு முறை ‘ராம’ என்று சொன்னால் அது ஒரு சகஸ்ர நாமம் (1008 ) தடவைகள் சொன்னதற்கு சமம் என்று சிவபெருமான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உத்தர பாகத்தில் கூறியிருக்கின்றார்.
அப்படி பட்ட ஆஞ்சநேயர் இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்து கொண்டிருகின்றார்.
தன்னுடைய உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஸ்ரீ ராமனிடத்தில் ஒப்படைத்து. தனக்காக வாழாமல் ஸ்ரீ ராமனுக்காகவே  வாழுகின்றார்.
ஸ்ரீ ராம நாமத்திற்கு  ஏன் இவ்வளவு பெருமை ?   
சிவ விஷ்ணுவின் ஐக்கியமே 

ஸ்ரீ ராம நாமம். நாரயணாவில் இருந்து வருகின்ற ‘ரா’ வும் நமசிவாய வில் இருந்து வருகின்ற ‘ம’ வும் சேர்ந்த நாமமே ‘ராம’.
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே

ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே

‘ராம’ என்றிரண்டெழுத்தினால்    
நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும் 

நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை 

சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே..
கம்பராமாயணம்:-
சொல்லில் அடங்கா புகழவன். சொல்லின் செல்வன். அஞ்சனைப் புதல்வன். சிவனின் அவதாரன். அவன் அழகைக் காண கோடி கண்கள் வேண்டும்.   அவன் புகழ்பாடி வையகமே திரளவேண்டும்.  அனுமன் என்னும் நாமம் அனைத்திலும் தித்திக்கும் பாணம்.  வானுயர வளர்ந்தாலும் வானரன். தானுயரப் பார்பதில்லை. ‘ராம’ என்று ஓரு முறை  உரைத்தால் போதும். கூனிக்குறுகி அணுவளவாய் மாறிடுவான்.
எங்கள் ஆஞ்சநேயப் பெருமான் துணிவிலும் பணிவிலும் சிறந்தவர். ஸ்ரீ ராம பக்தியிலே உயர்ந்தவர் அன்பின் கடல் அறிவின் சுரங்கம் தன் நலம் கருதாத தனிப் பெரும் கருணை பொறுமையின் சிகரம் வீரத்தின் விளை நிலம் ஓரு முறை ஓம் ஸ்ரீ ராம ஜெயம் சொன்னாலே சகல செல்வங்களையும் அள்ளித் தருகின்ற வள்ளல். தன்னுடைய மார்பினைப் பிளந்து  ஸ்ரீராமனையும் அன்னை சீதா பிராட்டியையும் காண்பித்த தெய்வம்.
அனுமனுக்கு பிடித்த அர்ச்சனை பொருட்கள்:

வடை மாலை 
வெற்றிலை மாலை
துளசி மாலை 
சிந்தூரம் 
பசு நெய் 
பழங்கள்


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.