Breaking News :

Friday, October 25
.

ஏழரை சனி காலங்கள் யாரை அதிக அளவு பாதிக்கும்?


சுயஜாதகத்தில் எவ்வளவு பெரிய யோக தசைகள் நடந்தாலும், ஏழரை சனி காலங்களில் மனிதனை கலக்கமடைய  செய்யவே செய்கிறது ..

ஏழரை மற்றும் அஷ்டம சனி காலங்களில் ,மற்றும் கண்டகச் சனி காலங்களில்  வேறு  ஏதேனும் கோட்சார ரீதியாக நல்ல.  சுப கிரகமான குரு  பெயர்ச்சி போன்ற விஷயங்கள்கூட எடுபடாது .

சுய ஜாதகத்தில் சனி மிகுந்த பாவத்துவமான நிலையில் இருப்பவர்கள் ..

லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு, பகை நிலையில் சனி உள்ளவர்கள் குறிப்பாக மேஷராசிக்காரர்கள், விருச்சிக ராசிக்காரர்கள்,

இங்கே நான் லக்னம் என குறிப்பிடுவது எதற்காக எனில் சிம்ம லக்னமாக இருந்து சனி தசையும் நடந்து உடன் ஏழரை சனியும் நடக்கும் பொழுது, ராசி  லக்னம் இரண்டுமே சனியின் கட்டுப்பாட்டில், ,(இது மிகக்கடுமையான அமைப்பு என்றே கூறலாம்)

இன்னும் ஒரு உதாரணமாக விருச்சிக லக்னத்திற்கு சனி தசை நடைமுறையில் இருந்தது, ஏழரை சனியும் நடக்கும் பொழுது லக்னத்திற்கு அவயோக தசையாக சனி ராசியில் ஏழரை சனி சந்திரன் மீது சனி பயணிக்கும் காலமும் மிக கடுமையானதாக இருக்கும் .

இதுவே சுய ஜாதகத்தில் சனி அமர்ந்த பாவகம், ஆட்சி உச்சம் போன்ற அமைப்புகளில் நட்பு நிலையிலான லக்னங்களில் சனி தசையும் நடந்து ஏழரை சனி காலத்தில்,

குறிப்பிட்ட நட்பு கிரக லக்னங்களுக்கு, திருமணம், குழந்தை பாக்கியம்,
வேலை உத்தியோகம் மாறுதல் பதவி உயர்வு  போன்ற சுப நிகழ்வுகளையும் சில சில சச்சரவுகளை மட்டுமே கொடுப்பார் ..

ஏழரைசனி மற்றும் அஷ்டமசனி காலங்களில் பெருமளவு பாதிக்கப்படுவது,
சந்திரன் உடை படாத நட்சத்திரமாக ஒரே ராசியில் இருப்பவர்கள் ..

உதாரணமாக சதயம் என எடுத்துக்கொண்டால் சதயத்தில் 4 பாதங்களும் கும்பராசியிலேயே வந்துவிடும்.

இதுவே விசாகம் என எடுத்துக்கொண்டால் விசாகத்தில், சனி பயணிக்கும் காலம் விசாகம் ஒரு உடைபட்ட நட்சத்திரம் என்பதால் பாதிப்பு சற்று குறைய வாய்ப்புண்டு என்றே கூறவேண்டும்.

பரிகாரங்கள்:

ஏழரை சனி அஷ்டம சனி கண்டக சனி காலங்களில் ,
காலபைரவரின் அம்சமாக கருதப் படக் கூடிய நாய்களுக்கு (ஆதரவின்றி இருக்கும் தெரு நாய்களுக்கு) ஒரு வேளையாவது உணவிடுதல் ..

அடிமட்ட தொழிலாளர்களான குப்பை எடுப்பவர்கள், துப்புறவு தொழிலாளர்கள் போன்றவர்களுக்கு நீர் உணவு முடிந்தவரை கொடுத்து உதவுதல் ..

நல்லெண்ணெய் தானம் செருப்பு குடை போன்றவை தானமாக தருதல் ,
மிக முக்கியமாக உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளுதல், நடைப்பயிற்சி, சனிக்கிழமைகளில் காக்கைக்கு அன்னம் இட்ட பின் உணவு அருந்துதல் போன்றவை. குறிப்பாக விநாயகர் வழிபாடும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

இறுதியாக மிக முக்கியமான விஷயம் சனிபகவானுக்கு தம்பட்டம் அடித்துக் கொள்ளுதல்  தன்னால் முடியும் என்ற கர்வம்  போன்றவை பிடிக்காது, ,சுய ஜாதகத்தில் சனி எந்த பாவத்தில் நிற்கிறாரோ அந்த பாவகம் சார்ந்த விஷயங்களில் ,அமைதியுடனும் தன்னடக்கத்துடன் இருத்தல் மிக மிக அவசியம் ..

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் "
மற்ற கிரகங்களுக்கு பொருந்துகிறதோ இல்லையோ சனிபகவானுக்கு இந்த திருக்குறள் மிகப் பொருத்தமானதாக இருக்கும் ..

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.