Breaking News :

Monday, April 29
.

ஐதராபாத்தில் 216 அடி உயர ராமானுஜர் சிலை -இன்று திறக்கிறார் பிரதமர் மோடி


ஐதராபாத்தில் ரூ.1000 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ராமானுஜரின் 216 அடி உயர ஐம்பொன்  சிலையை இன்று திறக்கிறார் பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

ஓம் நமோ நாராயணா’ என்ற 8 எழுத்து மந்திரத்தை உலகறிய செய்ய கோயில் கோபுரம் மீது ஏறி அனைவருக்கும் போதித்தவர் ராமானுஜர். வேதத்தை அழகு தமிழில் பாசுரங்களாய் எழுதிய நம்மாழ்வாரின் பெயரை நிலை நாட்டியவர். தீண்டாமையை ஒழிக்க வித்திட்டவர். இவர் வாழ்ந்து முடிந்து 1000 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, அவருக்கு தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் இருந்து 16 கிமீ தொலைவில் உள்ள ராமாநகரில் 216 அடி உயரத்தில் 1,500 டன் ஐம்பொன்னாலான சமத்துவ சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த சிலையை சுற்றி 108 திவ்ய தேச பெருமாள் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சிலையில் 120 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.  தாமரை மலர் பீடம் மீது ராமானுஜர் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கும் வகையில் பிரமாண்டமாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்குள் 200 கிலோ எடையில் தங்க சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.