Breaking News :

Wednesday, May 01
.

என்ன பேசுவது ! எப்படிப் பேசுவது - ஆசிரியர்: வெ இறையன்பு IAS


எதிர்காலத்தில் பல்கலைக்கழகம், கல்லூரி அளவில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், தகவல்தொடர்பியல், இதழியல், காட்சி ஊடகம், மேலாண்மையியல் போன்ற பாடப் பிரிவுகளில் சேர்ந்து பயில்கிற மாணவர்களுக்குப் பாட நூலாக என்ன பேசுவது! எப்படிப் பேசுவது? என்ற நூல் விளங்கிடும். குறிப்பாக இந்த நூல், பேராசிரியர்களுக்கு வகுப்பறையில் சுவாரசியமாகப் பாடத்தை நடத்திடுவதற்குக் கையேடாக உதவும். தகவல்தொடர்பை முன்வைத்துக் காட்சி ஊடகங்களில் சேர்ந்து பணியாற்றிட முயலுகிறவர்கள். மேடைப்பேச்சில் வெற்றிகரமான பேச்சாளராக விரும்புகிறவர்கள். தகவல் பரிமாற்றத்தை மேலாண்மை செய்கிறவர்கள் போன்றவர்களுக்கும் இந்த நூல் பயன்படும்.

தகவல்தொடர்பை முன்வைத்து இறையன்புவிவரித்திடும் பன்முகத் தகவல்கள். கிராமப்புற மாணவர்கள் எதிர்காலப் போட்டிமிகு வாழ்க்கையில் தங்களுக்கான இடத்தை அடைந்திட அடிப்படையாக விளங்கும்.

ந.முருகேசபாண்டியன்

இந்த நூல் என்ன பேசுவது என்பதை மட்டும் சொல்கிறதா. எப்படிப் பேசுவது என்பதை மட்டும் விவரிக்கிறதா என்றால் இல்லை; மாறாக பேச்சென்னும் பெருங்கலையின் அ முதல் ஃ வரையிலான சகலத்தையும் அலசுகிறது. பேச்சுக்கலையின் எட்டுத் திக்குகளையும் அலசி. பேச்சாற்றலின் நீள அகல ஆழ உயரங்கள் யாவற்றையும் பொறுமையாகவும் பொறுப்புடனும் அறியத் தருகிறது. பேச்சு என்பது வெறும் கலை அல்ல அது ஒரு பொறுப்பு. அதற்குத் தேவை பொறுமை, இந்த இரண்டையும் ஆழத் திருத்தமாய் ஒருவரது மனதில் பதிவதற்கான அகவொளிப் பாய்ச்சலே இந்த நூல்.

ஆத்மார்த்தி
விலை ரூ. 1000 / மட்டுமே
தபால்‌ ரூ. 100 /-
புத்தக தேவைக்கான தொடர்புக்கு
📨 support@papercrest.in
🤙98409 36488
098409 36488


பேப்பர் க்ரெஸ்ட்
ADDRESS: PAPER CREST BOOKSTORE, NO 197A, SUBASH TOWER, MAMBAKKAM MAIN ROAD, SITHALAPAKKAM, CHENNAI 600126, TAMILNADU


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.