Breaking News :

Saturday, April 27
.

உலக சிட்டுக்குருவி தினம் இன்று


சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல் படி என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது.சிட்டுக்குருவி மட்டுமல்ல இந்த உலகில் எந்த ஒரு உயிரினம் முழுவதுமாக அழிந்தாலும், அது மனித இனத்தின் அழிவுக்கான முதல் படி என்பதை நாம் என்றுமே மறக்கக் கூடாது.

 

இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களும் இந்த உலகில் வாழும் உரிமையை பெற்றுள்ளன. ஆனால், மனிதனின் சுயநலத்துக்காக மிருகங்களையும், பறவை இனங்களையும் அழித்து வருகிறோம். ஒரு சிட்டுக் குருவியை விளையாட்டுத்தனமாகக் கொன்ற சலீம் அலி, அதனால் தனது வாழ்க்கையையே பறவைகளுக்காக அர்பணித்து இந்தியாவின் பறவை மனிதர் ஆனார்.

 

சீன நாட்டில் பயிர்கள் அழிய சிட்டுக் குருவிகளும் ஒரு காரணம் என கோடிக்கணக்கில் அதனை அழிக்க 1958-ம் ஆண்டு மாவோ உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் கோடிக்கணக்கான சிட்டுக் குருவிகள் கொடூரமாக கொல்லப்பட்டன. இதனால், அடுத்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்கும் என்று பார்த்தால், அதற்கு மாறாக வெட்டுக்கிளிகளின் இனம் பெருகி விளைச்சல் பாதியாக குறைந்தது.

 

இதனால், அங்கு ஏற்பட்ட பஞ்சம் காரணமாக 1.5 கோடி சீனர்கள் பலியாகினர் என சீன அரசு தெரிவித்தது. ஆனால், தி டாம்ப்ஸ்டோன் புத்தகத்தில் 3 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொன்று இறந்ததாகவும், பசியின் கொடுமையால், மக்கள் நரமாமிசம் சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனால், அந்த புத்தகம் சீன அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.

 

சிட்டுக் குருவி தானே என சாதாரணமாக எண்ணாமல் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில், செல்போன் சிக்னல்களால் அந்த இனம் அழிந்து வருவதை 2.0 என ரஜினி, அக்‌ஷய்குமாரை வைத்து படமாக்கியிருந்தார் ஷங்கர்.

 

இன்று உலகம் முழுவதும் சிட்டுக்குருவி தினம் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவியின் தேவையை உணர்ந்த ஐ.நா, 2010-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதியை உலக சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது.

 

டெல்லி அரசு கடந்த 2012-ம் ஆண்டு சிட்டுக்குருவியை தங்கள் மாநில பறவையாக அங்கீகரித்தது.

 

சிட்டுக்குருவிக்காக நம்மால் பெரிதாக ஏதும் செய்ய முடியாவிட்டாலும், இந்தக் கோடை காலத்தில் வீட்டிற்கு வெளியிலோ அல்லது மாடியிலோ, சிறிது தண்ணீர் மற்றும் தானியங்கள் வைத்தால் போதும்.


Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.