Breaking News :

Monday, June 17
.

சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் முதல்வரின் உரையை வாசித்தார் வில்சன்


புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் தேசிய மாநாட்டில் கழகத் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான  மு.க.ஸ்டாலின் அவர்களின் உரையை அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வில்சன் அவர்கள் வாசித்தார்.

 
இன்று நாம் கூடியுள்ள வேளையில், இந்தியாவில் சமூகநீதியை வென்றெடுப்பதில் தமிழ்நாடு ஆற்றிய முக்கியப் பங்கை அங்கீகரிப்பது மிகுந்த பொருத்தமானது எனக் கருதுகிறேன். சமூகநீதிக்கான ஒளிவிளக்காகத் தமிழ்நாடு திகழும் மரபு 1921-ஆம் ஆண்டு நீதிக்கட்சி அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க அறிமுகப்படுத்திய வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையில் இருந்தே தொடங்குகிறது.

விடுதலைக்கு பிறகு, இட ஒதுக்கீட்டு முறைக்கு ஆபத்து வந்தபோது, திராவிட இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான போராட்டங்களால்தான் முதல் அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்குக் காரணம், ‘happenings in Madras’ என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒடுக்கப்பட்ட சமூகங்களை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதை இந்தச் சட்டத்திருத்தம் உறுதிசெய்தது.

தற்போது, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் ஆகியோருக்கான இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% ஆக உள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவு 50%-ஐத் தாண்டக்கூடாது எனத் தன்னிச்சையாக விதிக்கப்பட்ட அளவைவிடவும் கூடுதலாகத் தமிழ்நாட்டில் இது நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக, தொழில்முறைப் பட்டப்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதோடு, அவர்களுக்கான கல்வி, விடுதிச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் எனவும் அண்மையில் அறிவித்துள்ளோம். மேலும், கிறித்தவத்துக்கு மதம் மாறிய ஆதி திராவிடர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தையும் அண்மையில் தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ளது.

தி.மு.கழகத்தின் சமூகநீதிக் கொள்கைகளை எதிரொலிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் 2024 தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதைக் கண்டு நான் உவப்படைகிறேன். அடுத்து அமையவுள்ள நமது அரசு பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர்களை உயர்த்தும் வகையில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறேன்.

••••••••

 

As we convene today, it's imperative to acknowledge Tamil Nadu's pivotal role in championing Social Justice within India. The legacy of the Justice Party Government, dating back to 1921, stands as a beacon of Social Justice with the introduction of reservations for the underprivileged through the communal G.O.

Post-independence, amidst threats to the reservation system, the resolute protests by the Dravidian Movement, famously known as 'the happenings in Madras,' catalysed the first amendment of our constitution. This amendment solidified affirmative action, ensuring the continued upliftment of marginalised communities.

Currently, Tamil Nadu proudly boasts a 69% reservation for OBCs, SC/STs, surpassing the arbitrary 50% limit. Notably, recent strides include a groundbreaking 7.5% reservation in professional courses for students from Government schools, alongside full financial support for those admitted under this quota. Moreover, the Tamil Nadu Legislative Assembly has recently passed a resolution urging the Union Government to extend reservations to Scheduled Caste members who have converted to Christianity.

It heartens me to observe that many of the DMK's principles echo within the Congress Election Manifesto for the 2024 Parliamentary Elections. I earnestly hope that our forthcoming Government will earnestly fulfill its pledges to uplift OBCs and SC/STs.

இம்மாநாட்டில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் திருமதி சோனியா காந்தி, திரு. ராகுல் காந்தி, தேசிய அளவிலான கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற நீதியரசர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், அகில இந்திய சமூக நீதி கூட்டமைப்பின் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.