நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியீடு
தமிழ்நாட்டில் வரும் பிப் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையாத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பிராதன கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாஜக அதிமுக இடையே இடப்பங்கீடு விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிமுக சார்பாக போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
அந்தப் பட்டியலில் கடலூர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், கடலூர் கிழக்கு, வடக்கு, மேற்கு விழுப்புரம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர் என இருவரும் கூட்டாக முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.