ஜி7 உச்சி மாநாடு இன்றும் (26ம் தேதி), நாளையும் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி ஜெர்மனி சென்றடைந்தார்.
இசை வாத்தியங்கள் முழங்க அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்குள்ள இந்தியர்களையும் பிரதமர் மோடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.