சபரிமலையில் மண்டல பூஜை , மகர விளக்கு காலத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி என தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது
சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க முக்கிய முடிவு, கடந்த முறை சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வரும் மண்டல காலம் - மற்றும் மகரவிளக்கின் போது ஸ்பாட் புக்கிங் கிடையாது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 80 ஆயிரம் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் . போக்குவரத்தை கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட முடியாததால், கூட்ட நெரிசல் காரணமாக அடிக்கடி தரிசன நேரத்தை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்கவே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாக தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.