தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை வெளியாகின்றன.
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு பதிவு செய்த செல்போனுக்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்படும். தமிழகத்தில் மார்ச் 1 முதல் 22 ஆம் தேதி வரை நடந்த பிளஸ் 2 தேர்வை 7.8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதினர்.