Breaking News :

Sunday, September 15
.

காவலரின் செல்போனை பிடுங்கி கீழே போட்ட வாலிபர்?


விருகம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்ததை செல்போனில் வீடியோ எடுத்த போது, எதிரி காவலரின் செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்துவிட்டு தப்பினார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் பாதிக்கப்பட்ட போக்குவரத்து காவலரை நேரில் அழைத்து புதிய செல்போன் வழங்கினார்.

Traffic Police Tr.Sudhakar while recording the abusive words by a person, in his cell phone, the accused quarreled with the PC and snatched his cellphone, smashed it and fled. Commissioner of Police invited traffic police Tr. Sudhakar and gave him a new cell phone.

R-5 விருகம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.சுதாகர், (மு.நி.கா.31060) என்பவர் கடந்த 03.12.2021 அன்று காலை ஆற்காடு சாலை, பிரான்தெரு சந்திப்பில் பணியிலிருந்து போது, வடபழனியிலிருந்து போரூர் நோக்கி எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கிப்பிடித்து விசாரணை செய்த போது, அவர் போக்குவரத்து காவலரிடம் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார்.  உடனே போக்குவரத்து காவலர் தனது செல்போனில் வீடியோ எடுத்த போது, கோபமடைந்த நபர் மேற்படி போக்குவரத்து காவலரின் செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்து விட்டு, இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு  தப்பியுள்ளார்.  

போக்குவரத்து காவலர் சுதாகர் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி  R-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தப்பியோடிய குற்றவாளியை போலீசார்  தேடிவருகின்றனர்.  தகவலறிந்த  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மேற்படி போக்குவரத்து காவலர் திரு.சுதாகரை நேரில் அழைத்து அவருக்கு புதிய செல்போன் வழங்கினார்.  

On 03.12.2021, Tr. Sudhakar (Gr I PC 31060), R-5 Virugambakkam Traffic PS, was on duty at Arcot Road and Bran Street Junction noticed a person came in a two-wheeler in the opposite direction. 

The police personnel apprehended him and during interrogation, he spoke inappropriate words and quarreled with him. Immediately the traffic policeman videographed his abuse on his cell phone and the person snatched the cellphone from the traffic police constable, smashed it down, and fled away, leaving behind his two-wheeler. 

The traffic Police handed over a two wheeler to R-7 K.K.Nagar PS.  
Greater Chennai Police Commissioner personally invited the traffic police Tr. Sudhakar and gave him a new cell phone.

#chennaipolice 
#greaterchennaipolice 
#chennaicitypolice
#shankarjiwalips

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.