பொதுக்குழுவுக்கு தடை கேட்பதை தவிர, வேறு நிவாரணம் கேட்கலாமே? - ஓ.பி.எஸ். தரப்புக்கு நீதிபதி கேள்வி
ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா? என்பது தான் இந்த வழக்கு - ஓ.பி.எஸ் தரப்பு வாதம்
ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவின் நீட்சிதான் வரும் 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு? - நீதிபதி
அந்த கூட்டம் தனி, இந்த கூட்டம் தனி - ஓ.பி.எஸ். தரப்பு பதில்
ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அவர்கள் செயல்பட முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது; அன்றைய பொதுக்குழுவில் அந்த விவகாரமே எடுக்கப்படவில்லை - ஓ.பி.எஸ். தரப்பு
தலைமை நிலைய நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு பதவியே இல்லை
கட்சி விதிகளில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்க்கு மட்டுமே அதிகாரமே உள்ளது - ஓ.பி.எஸ். தரப்பு வாதம்