திமுகவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட முக்கிய நிர்வாகிகளின் குடும்பத்தினர் உள் ளாட்சித் தேர்தலில் போட்டியிடக் கூடாது என முதல்வர் கட்டுப்பாடு விதித்துள்ளார். இதனால் பலருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கட்சியினர் நம்பிக்கை தெரிவித்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட் சித் தேர்தல் பிப்.19-ம் தேதி நடை பெற உள்ளது. 2 நாட்களாக வேட்புமனு பெறப்படுகிறது. பிப்.4-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். இதனால் கூட்டணி பேச்சு, வேட்பாளர்கள் தேர்வில் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பல ஊர்களில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர், மண்டல தலைவர்கள் உட்பட முக்கிய பதவிகளைப் பிடிக்க கட்சி நிர்வாகிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் திமுகவில் முக் கிய நிர்வாகிகளின் குடும்ப உறுப் பினர்கள் யாரும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முதல்வர் பிறப்பித்த உத்தரவு பல்வேறு மாற்றங்களை ஏற் படுத்தி வருவதாகக் கட்சியினர் தெரிவித்தனர்.
இது குறித்து திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: மதுரையில் மகளுக்கும், மருமகளுக்கும் மேயர் பதவி பெற மாவட்டச் செயலாளர்கள் 2 பேரிடையே கடும் போட்டி நிலவியது. இதேபோல் நகராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளை பிடிக்கவும் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏ.க்கள் இடையே அதிக ஆர்வம் இருந்தது. இதற்கேற்ப வேட்பாளர்களைத் தேர்வு செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இது போன்ற தகவல்கள் மாநி லம் முழுவதும் இருந்து முதல் வருக்கு சென்றது. முக்கிய நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர் களுக்கு சீட் வழங்கினால் அது தேர்தலில் பெரிய அளவில் வாரிசு பிரச்சினை எழுந்து வெற்றியைப் பாதித்துவிடும் என முதல்வர் கருதினார்.
இதையடுத்து திமுக மாவட்டச் செயலாளர்களுடன் தேர்தல் பணிகள் குறித்து முதல்வர் 2 நாட்களுக்கு முன்பு காணொலி வாயிலாக ஆலோசனை செய்தார். அப்போது அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் குடும்ப உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிடும் சூழலை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வாக் காளர்களிடம் தவறான எண்ணத்தை உருவாக்கிவிடும். மேலும் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட் டுமே வாய்ப்பளிக்க வேண்டும் என முதல்வர் கட்டுப்பாடு விதித்தார். இதைக் கேட்டதும் பலர் அதிர்ச்சியும், விரக்தியும் அடைந்தனர். இதனால் குடும்ப உறுப்பினர்கள் போட்டியிடத் திட்ட மிட்ட வார்டுகளில் வேறு ஒரு வருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ப தால் வேட்பாளர் தேர்வில் அதிக மாற்றம் ஏற்படும். பல முக்கிய நகரங்களில் இந்த நிலை உள்ளது.
மதுரையில் கோ.தளபதி எம்எல்ஏ தனது மகள் போட்டியிட வில்லை எனக் கட்சியினரிடம் தெரிவித்துவிட்டார். அதே நேரம் முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளருமான பொன்.முத்துராமலிங்கம் தனது குடும் பத்தில் யாரும் போட்டியிட மாட் டார்கள் என வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.