Breaking News :

Tuesday, April 30
.

இலங்கைக்கு நிதி வழங்க இந்தியா முடிவு


இலங்கையில் ஏற்பட்டு வரும் கடும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. அந்நாட்டில் தொடர்ந்து அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்டவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இலங்கை அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்தும், அது அவர்களுக்கு  பலன் தரவில்லை. இதையடுத்து இந்தியாவிடம் கடன் உதவி கேட்டு இலங்கை அரசு கோரிக்கை விடுத்தது. இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

இதையடுத்து இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடன் உதவி அளிப்பதாக இந்தியா அறிவித்தது. அதன்படி இலங்கைக்கு 40 டன் டீசல் கப்பலில் அனுப்பப்பட்டது. மேலும் அரிசிகளையும் இந்தியா அனுப்பி வைத்தது.  இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா வழங்கியது. 

இந்நிலையில், அந்நாட்டு மத்திய வங்கி கவர்னர் நந்தலால் வீரசிங்கே கூறும்போது, “இலங்கையில் அந்நிய செலவாணியை அதிகமாக தேவைப்படும் இந்த முக்கியமான தருணத்தில் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை நாட்டவர்கள் நாட்டுக்கு உதவ வேண்டும்” என்றார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.