குதிரையாறு அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், குதிரையாறு அணையிலிருந்து வலது பிரதானக் கால்வாய் பாசனம், இடது பிரதானக் கால்வாயில் நேரடி பாசனம் மற்றும் பழைய நேரடி ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக் கோரியுள்ள வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டத்தில் பழைய மற்றும் புதிய பாசனப் பரப்பு 4455.52 ஏக்கர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பழைய நேரடி பாசனப் பரப்பு 185.65 ஏக்கர் ஆக மொத்தம் 4641.17 ஏக்கர் பயன்பெறும் வகையில், 21/05/2021 முதல் 04/07/2021 வரை 45 நாட்களுக்கு, வினாடிக்கு 31 கனஅடி வீதம் மொத்தம் 99.00 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது." இவ்வாறு பொதுப்பணித்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
குதிரையாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!
.