Breaking News :

Sunday, September 15
.

பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனத்தில் கஞ்சா கடத்தல்!!


கோவையில் பத்திரிகையாளர் அடையாள அட்டையுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இருவர் கைது செய்யப்பட்டனர் . கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே வடவள்ளி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் . அப்போது , அங்கு பத்திரிகையாளர் போல பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டி வந்த காரை மடக்கி காவல் துறையினர் சோதனையிட்டனர் .

அப்போது , காரில் சுமார் 2.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது . அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் , பிடிபட்ட நபர்கள் பி . என் . புதூரைச் சேர்ந்த சரவணன் (38) மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா (22) என்பதும் தெரியவந்தது .இதையடுத்து பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும் , ஆனால் , காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டியதோடு ஆரம்பம் மலர் என்ற வார பத்திரிகையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும் தெரியவந்தது . இதையடுத்து , இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.