அண்ணன் சீர் திட்டம்: பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

annan-seeru-thittam-women-important-update
அண்ணன் சீர் திட்டம்: பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு

திட்டத்தில் பயன்பெற ஆதார் இல்லையா? கவலை வேண்டாம்! மாற்று ஆவணங்கள் மூலம் பயன்பெற வழி!

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் அண்ணன் சீர் திட்டத்தில் பயன்பெறுவதற்கு விண்ணப்பிக்கத் தேவையான முக்கிய ஆவணங்கள் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பு மற்றும் பெண்களுக்கான திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வரும் தமிழக அரசு, தாய்மாமன் தங்க மோதிரம் மற்றும் வெற்றிப் பயணம் ஆகிய இரண்டு திட்டங்களை அடுத்தடுத்து தொடங்கியது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக அண்ணன் சீர் திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் திருமணமாகும் பெண்களுக்கு அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 8 கிராம் தங்க நாணயத்துடன், ஒரு பட்டு சேலை வழங்குவதற்கான அரசாணையை அக்டோபர் 5 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.812 கோடி நிதியை அரசு ஒதுக்கியது.

இந்த நிலையில், அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தகுதியுடைய பெண்கள், ஆதார் எண்ணைச் சமர்ப்பிப்பது அல்லது ஆதார் அங்கீகாரத்தை பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், ஆதார் எண் இல்லாத பெண்கள் தங்களுக்குரிய சலுகைகளைப் பெறுவதற்கான மாற்று ஏற்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்,

அண்ணன் சீர் திட்டத்தின் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யும் பெண்களுக்கு அவர்களது திருமணத்தின்போது 22 காரட் தங்க மாணயம் 8 கிராம், ஒரு பட்டு சேலை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் சமூக நல இயக்குநரகம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

▪️திட்டத்தில் பயன்பெற ஆதார் இல்லையா? கவலை வேண்டாம்! மாற்று ஆவணங்கள் மூலம் பயன்பெற வழி!

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வெளியிட்டுள்ள அரசிதழில் அண்ணன் சீர்” திட்டத்தில் ஆதார் தொடர்பான முக்கிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

▪️ஆதார் இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?

ஆதார் பெறத் தகுதியுள்ளவர்கள் முதலில் ஆதார் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஆதார் எண் கிடைக்கும் வரை, அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி கூழ்கண்ட மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.

▪️மாற்று ஆவணங்கள்: