"நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா" - பெரியவா

kanchi-maha-periyava-arulurai
"நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா" - பெரியவா

எங்கள் தகப்பனார் மணக்கால் நாராயண சாஸ்திரிகள் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் முத்ராதிகாரியாக பெரியவா கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தார்.

ஒரு சமயம், சுமார் 70 வருஷம் முன்பு வியாச பூஜை முடிந்து ஊருக்கு கிளம்ப உத்தரவு வேண்டி இருந்த சமயம், பெரியவா, இந்த முறை நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்றார். எங்கள் தகப்பனார் எனக்கு ரெண்டு பிள்ளைகள் தான் ஸ்திரீ பிரஜை இல்லை என்று சொன்னார். திரும்பவும் பெரியவா நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா என்று திரும்பவும் சொன்னார். இதே போல மூன்று முறை சொல்லிவிட்டு பெரியவா உள்ளே சென்று விட்டார்.

அப்பா மணக்கால் வந்ததும் எங்கள் பாட்டி (பார்வதி) யிடம் பெரியவா முன்பு நடந்த சம்பவத்தை சொன்னார். எங்க பாட்டி சொன்னது ~ ஆமாண்டா பெரியவா சொல்வது சரிதான். உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா என்றார்.

அப்பா பெரியவாளிடம் ஸ்திரீ பிரஜை பிறந்த விஷயம் சொன்ன சமயம் ஒன்றும் தெரியாதது மாதிரி 'அப்படியா' என்று கேட்டாராம். பெரியவா பரிபூர்ண ஆசிர்வாத மகிமை, பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு பெரியவா காமகோடி என்று பெயர் சூட்டினார்.

ரெண்டு நவராத்ரி பூஜைக்கு கலந்து கொள்ளும் பாக்கியம் பெரியவா கொடுத்தார்.

இப்ப அந்த காமகோடி பெண்ணின் (அகிலாண்டேஸ்வரி) கல்யாணம் நடந்து தற்சமயம் கனடாவில் இருக்கா.

இது போல அந்த மஹான் நடத்திய அற்புத லீலைகள் பல.

இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது.