கட்டைவிரலைக் கொடுத்த பிறகும் ஏகலைவன் வில்வித்தையை விட்டுவிட்டானா? பலரும் அறியாத உண்மை கதை!

egalaivan-vill-vitthai-real-story
கட்டைவிரலைக் கொடுத்த பிறகும் ஏகலைவன் வில்வித்தையை விட்டுவிட்டானா? பலரும் அறியாத உண்மை கதை!

மகாபாரதத்துல ஏகலைவன்னு சொன்னாலே நமக்கு உடனே ஞாபகம் வர்றது... துரோணரோட மண்ணாலான சிலையை வச்சு வில்வித்தை கத்துக்கிட்டதும், அர்ஜுனனுக்காக துரோணர் அவனோட கட்டைவிரலைக் குருதட்சணையா கேட்டதும்தான்.

ஆனா, கட்டைவிரல் போன அப்புறம் ஏகலைவன் என்ன ஆனான்? மொத்தமா வில்வித்தையை விட்டுட்டானா? பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் இதோ:

கட்டைவிரல் போச்சு, ஆனா குறி தப்பல!

கட்டைவிரல் போனதும் அவன் உடைஞ்சு போய்டல. ஆள்காட்டி விரல், நடுவிரல் அப்புறம் கால்களைப் பயன்படுத்தி புதுசா ஒரு ஸ்டைல்ல வில்விட்டு அம்பு விடப் பழகினான். சொல்லப்போனா, இன்னைக்கு ஒலிம்பிக் உள்ளிட்ட மாடர்ன் ஆர்ச்சரில விரல்களை வச்சு அம்பு விடுற முறைக்கு அடித்தளமே ஏகலைவன் ஆரம்பிச்ச அந்த வித்தைதான்னு சொல்லுவாங்க!

ஜராசந்தனோட முக்கிய தளபதி:

கட்டைவிரல் இல்லாமலும் அவனோட வேகம், வீரம் குறையவே இல்ல. வேடுவர் குலத்துக்குத் தலைவனாகி, மகத நாட்டு மன்னன் ஜராசந்தனோட படையில் முக்கியமான தலைமைத் தளபதியா மாறினான்.

கிருஷ்ணரோட நேரடி மோதல்:

ஜராசந்தன் பலமுறை மதுரா மேல படையெடுத்தப்போ, ஏகலைவன் அவனுக்கு ஆதரவா நின்னான். அங்கே கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு எதிரா கடும் சவாலா நின்னு சண்டை போட்டான்.

ஏகலைவனோட முடிவு:

அசாத்திய திறமை இருந்தும் அவன் நின்னது அதர்மத்தின் பக்கமான ஜராசந்தன் கூட. ருக்மணி சுயம்வரம் மற்றும் யாதவர்களுடனான தொடர் போர்கள்ல அவனோட அதீத பலம் தர்மத்துக்கு ஆபத்தா மாறினதால, பாரதப் போருக்கு முன்னாடியே கிருஷ்ணரோட கையாலேயே அவன் வீரமரணம் அடைஞ்சான்.

கட்டைவிரல் போயும் தன்னம்பிக்கையை விடாத ஏகலைவன், சரியான தர்மத்தின் பக்கம் மட்டும் நின்றிருந்தால் மகாபாரதப் போரின் தலையெழுத்தே மாறியிருக்கும்!