Breaking News :

Monday, December 02
.

"ஒரு சாப்பாட்டு ராமனுக்கு உபதேசம்" - மகா பெரியவா


(மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.அதுவே முடிவான நிலை.

வேள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக்கலந்த பிறகுமேலே  தொடரஎதுவிமில்லை.)

"எல்லோரும் 'ஈகோ'வுடன் பிறக்கிறார்கள். அதுதான் ஆரம்பம் அதையே முதலில் சாப்பிடும் 'தானோடு'சேர்ந்த குழம்பு காட்டுகிறது.

பலவிதமாகக் குழம்புவதால் பிடிக்காமல் போகும் வாழ்க்கையே மனசு தெளிந்து விட்டால்,பிடித்துப் போகிறது.

ரசமாகி இருக்கிறது. அதனால் பிறக்கும் ஆனந்தம்-இனிமை இவைதான் பாயசம்,பட்சணம். இனிமையையே அனுபவித்துக் கொண்டிருந்தால் திகட்டிவிடுமே! அதற்கு மேல் போய் பிரும்மானந்தத்துடன் லயிக்க வேண்டாமா?
அதுதான் 'மோர்' அந்த நிலை சாஸ்வதமானது.

பாலை எடுத்துக் கொண்டால் அதிலிருந்து தயிர்,வெண்ணெய், நெய் என்று ஏதாவது மாறுதல் வந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், மோர் நிலையை அடைந்த பிறகு அதிலிருந்து எதையும் எடுக்கவும் முடியாது-கலக்கவும் முடியாது.

அதுவே முடிவான நிலை.வேள்ளையாக இருக்கும்.சத்துவ மயமான பரமாத்மாவைக்கலந்த பிறகுமேலே தொடரஎதுவிமில்லை.

மோர் சாதம் முடிந்த பின் இலையை எடுத்துவிட்டு எழுந்திருக்க வேண்டியதுதான்!"

இப்படியாக மிகப் பெரிய விஷயத்தை ஒரு சாப்பாட்டு ராமனுக்கு மிக எளிமையாக உபதேசித்துவிடுகிறார் மகா பெரியவர்.

கட்டுரையாளர்-கணேச சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.