Breaking News :

Thursday, May 16
.

ஜாதகம் என்றால் என்ன?


ஜாதகம் என்றால் என்ன? ஒரு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அது எந்த நாளில் எந்த நேரத்தில் பிறந்திருக்கிறது. அது எந்த ஊரில் பிறந்திருக்கிறது என்பதைப் பார்த்து அந்த ஊரை முக்கியமாகக் கொண்டு அந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எத்தனை எத்தனை டிகிரியில் அமைந்துள்ளது என்பதை கணித்து 12 கட்டங்களில் குறித்து தருவார்கள். அதை ராசிக் கட்டம் என்று சொல்வார்கள். அதைத்தான் நாம் ஜாதகம் என்றும் சொல்லி வருகிறோம்.நமது பூமியை ஆதாரமாக (reference) வைத்து, பூமியைச் சுற்றியுள்ள அண்ட வெளியை (zodiac) 12 பாகங்களாகப் பிரித்து (12 ராசிகள்), எந்த கிரகம், எந்த பாகத்தில், அன்றைய தினத்தில், நேரத்தில் உள்ளது என்பதையே ராசி சக்கரம் (ராசிக் கட்டம்) உணர்த்தும்.

பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?

 

மேஷம்,

ரிஷபம்,

மிதுனம்,

கடகம்,

சிம்மம்,

கன்னி,

துலாம்,

விருச்சிகம்,

தனுசு,

மகரம்,

கும்பம்,

மீனம்.

 

2.

ராசி அதிபதிகளின் பெயர் என்ன?

 

மேஷம் - செவ்வாய்

ரிஷபம் - சுக்கிரன்

மிதுனம் - புதன்

கடகம் - சந்திரன்

சிம்மம் - சூரியன்

கன்னி - புதன்

துலாம் - சுக்கிரன்

விருச்சிகம் - செவ்வாய்

தனுசு - குரு

மகரம் - சனி

கும்பம் - சனி

மீனம் - குரு

 

 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?

அட்டவனை உள்ளது பார்க்கவும்

 

4. லக்கினம் என்பது என்ன?

 

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்

பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

 

உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை

6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய 

லக்கினம் சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் 

அடுத்தடுத்த லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.

 

5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?

 

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்

ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.

 

6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?

 

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.

அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.

 

7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

 

பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,தசாபுத்தி என்பது ரோடு,கோள்சாரம் என்பது டிரைவர்.லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து ஜாதகனுடைய

வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன் பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள் கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.

 

8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?

 

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.

 

9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?

 

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக் கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும் மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர் (Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான் தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

 

10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?

 

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.

 

11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?

 

சூரிய தசை - 6 ஆண்டுகள் 

சந்திர தசை - 10 ஆண்டுகள்

செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்

ராகு தசை - 18 ஆண்டுகள்

குரு தசை - 16 ஆண்டுகள்

சனி தசை - 19 ஆண்டுகள்

புதன் தசை - 17 ஆண்டுகள்

கேது தசை - 7 ஆண்டுகள்

சுக்கிர தசை - 20 ஆண்டுகள்

 

மொத்தம் 120 ஆண்டுகள்

 

12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?

 

சூரியன் - சிம்மம்

சந்தின் - கடகம்

(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)

செவ்வாய் - மேஷம், விருச்சிகம்

புதன் - மிதுனம், கன்னி

குரு - மூலம், மீனம்

சுக்கிரன் - ரிஷபம், துலாம்

சனி - மகரம், கும்பம்

(இந்த ஐந்து கிரகங்களுக்கு 

தலா 2 வீடுகள் சொந்தம்)

ராகு - சொந்த வீடு இல்லை

கேது - சொந்த வீடு இல்லை

 

13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?

 

ஒரு கிரகத்திற்கு அதன் சொந்த வீட்டில் 100% சக்தி (Power) உண்டு

உச்ச வீட்டில் சொந்தவீட்டைப்போல இரண்டு மடங்கு சக்தி உண்டு!

 

கோள்கள் "உச்சம்" அடையும் இராசி

சூரியன் - மேஷத்தில்,

சந்திரன் - ரிஷபத்தில்,

குரு - கடகத்தில்

புதன் - கன்னியில்

சனி - துலாமில்

ராகு,கேது - விருச்சிகத்தில்

செவ்வாய் - மகரத்தில்

சுக்கிரன் - மீனத்தில்

=======

நீசவீட்டில் ஒரு கிரகத்திற்கு சுத்தமாக வலிமை இருக்காது.

 

கோள்கள் "நீசம்" அடையும் இராசி

சூரியன் - துலாமில்,

சந்திரன் - விருச்சிகத்தில்,

செவ்வாய் - கடகத்தில்,

புதன் - மீனத்தில்

குரு - மகரத்தில்

சுக்கிரன் - கன்னியில்

சனி - மேஷத்தில்

ராகு, கேது - ரிஷபத்தில்

 

கேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 4, 7,10ஆம் வீடுகள் 

 

திரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள். கேந்திரம் சிறப்பானது அதைவிட திரிகோணம் இன்னும் சிறப்பானது.இந்த வீடுகளில் அமரும் கிரகங்கள் வலிமை 

பெற்றுவிடும்

15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

 

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம் இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும் கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம் 10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

 

16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?

 

அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின் தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8 ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337

(யாராக இருந்தாலும் 337 மட்டுமே)

இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை சுலபமாக அறியலாம்.

இதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப் பயன்படுத்தவும்.

 

17.நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?

 

Navamsam is the magnified version of a Rasi Chart

ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம் அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் 

காட்டுவதுதான் நவாம்சம்.(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

 

18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?

காரகன் என்பவன் authority ஒரு வீட்டின் அதிபதி என்பது அந்த வீட்டின் சொந்தக்காரன் (Owner)

காரகன் என்பவன் அந்த வீட்டின் செயல்களுக்கு உத்தரவு போட்டு நடத்திவைக்கும் வலிமை உடையவன்(authority)

 

(உதாரணத்திற்கு ஒன்பதில் சனி இருந்தால், அப்பாவிற்கும் மகனுக்கும் ஒத்துவராது.

ஆனால் ஜாதகனுடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தையாகக் கொடுப்பான்.

ஒத்துவராமைக்கு இவன் காரணமாக இருந்தாலும் தந்தை அனுசரித்து அன்பாக இருப்பார். அதற்கு காரகன் காரணமாக அமைவான்.)

 

தந்தைக்குக் காரகன் சூரியன் உடல் காரகன் சூரியன் தாய்க்குக் காரகன் சந்திரன் மன காரகன் சந்திரன்

ஆயுள் காரகன் சனி தொழில் காரகன் சனி களத்திர காரகன் சுக்கிரன் தன (பணம்) காரகன் குரு புத்திரகாரகன் குரு

கல்வி,புத்தி காரகன் புதன் ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!..

 

நன்றி அஸ்ட்ரோ

வெ.பழனியப்பன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.