Breaking News :

Friday, October 25
.

தோஷம் நீங்க ஏற்ற வேண்டிய தீபங்கள்?


1.    ராகு தோஷம்            - 21 தீபங்கள்
2.    சனி தோஷம்            -  9 தீபங்கள்
3.    குரு தோஷம்            - 33 தீபங்கள்
4.    துர்க்கைக்கு               -  9 தீபங்கள்
5.   ஈஸ்வரனுக்கு            - 11 தீபங்கள்
6.    திருமண தோஷம்   - 21 தீபங்கள்
7.    புத்திர தோஷம்        - 51 தீபங்கள்
8.    சர்ப்ப தோஷம்         - 48 தீபங்கள்
9.    காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10.  களத்திர தோஷம்    -108 தீபங்கள்

வலம் வருதல்
1.    விநாயகர்                        -      1 அல்லது 3 முறை
2.    கதிரவன் (சூரியன்)      -      2 முறை
3.    சிவபெருமான்               -      3, 5, 7 முறை  (ஒற்றைப்படை)
4.    முருகன்                           -      3 முறை
5.    தட்சினா மூர்த்தி         -      3 முறை
6.    சோமாஸ் சுந்தர்          -      3 முறை
7.    அம்பாள்                          -      4, 6, 8 முறை  (இரட்டைப்படை)
8.    விஷ்ணு                          -      4 முறை
9.    இலக்குமி                       -      4 முறை
10.  அரசமரம்                        -      7 முறை
11.  அனுமான்                      -      11 அல்லது  16 முறை
12.  நவக்கிரகம்                  -      நவகிரகங்கள் நம்மை சுற்றுகின்றன அதனால் நாம் அவர்களை சுற்ற தேவையில்லை
13  பிராத்தனை                    -  108  முறை

* மூலவர் மற்றும் அம்மன் போன்ற திருவுருவங்களுக்கு அபிஷேகம் செய்யும்போது உட்பிரகாரத்தில் வலம் வரக்கூடாது.

* அஷ்டமி, நவமி, அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, சோமவாரம், சதுர்த்தி போன்ற நாட்களில் வில்வ இலை பறிக்கக்கூடாது. இதற்கு முந்தைய நாள் மாலையிலேயே இதைப் பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மேலே துண்டு போட்டுக் கொண்டு சுவாமி தரிசனம் செய்யக்கூடாது.
* கொடி மரம், நந்தி, கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்கக்கூடாது.

* விளக்கில்லாதபோது இருட்டில் வணங்கக்கூடாது.
* தகாத வார்த்தை மற்றும் எதிர்மறை சொற்களை பேசக்கூடாது.
* கோவிலுக்குள் தூங்கிவிடக்கூடாது. கோவிலுக்குச் சென்று வீடு திரும்பியதும், கால்களைக் கழுவக்கூடாது.

வணங்கும் விதி

பிரம்மா , விஷ்னு , சிவன் இம்மூவரை வணங்கும் போது , சிரசின் மேல் 12 அங்குலம் உயர்த்தி கைகூப்பி வணங்க வேண்டும்.

மற்ற தெய்வங்களை சிரசின் மேல் கைகூப்பி வணங்கினால் போதும்.

குருவை வணங்கும் போது , நெற்றியில் கைகூப்பி வணங்க வேண்டும்.

அரசரையும் , தகப்பனாரையும் வணங்கும் போது வாய்க்கு நேராக கைகூப்பி வணங்கவேண்டும்.
... பிராமணரை வணங்கும் போது மார்பில் கைகூப்பி வணங்க வேண்டும்.

தன்னுடைய தாயை வணங்கும் போது வயிற்றில் கைவைத்து வணங்க வேண்டும்.
மாதா, பிதா, குரு தெய்வங்களை வணங்கும் போது ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.பூமியில் நெடுஞசாண் கிடையாக வணங்க வேண்டும்.

ஆனால் பெண்கள் , மாதா , பிதா , குரு , தெய்வம் மற்றும் கணவனை வணங்கும் போது பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். பெண்களுடைய ஸ்தனங்கள் பூமியில் படக்கூடாது. ஓம் நமச்சிவாய!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.