Breaking News :

Thursday, May 16
.

எந்த ராசிக்கு என்ன சிவன் கோயில்கள் சிறப்பு?


மேஷம்:- மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம்.

 

ரிஷபம்:- திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென் றும் பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

 

மிதுனம்:- திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வர லாம். சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

 

கடகம்:- திருக்கடையூர், திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச சென்று வழிபடலாம். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து வணங்கலாம்.

 

சிம்மம்:- சிதம்பரம், திருவண் ணாமலை சென்று வழிபட லாம். அருகிலுள்ள சிவால யத்துக்குச் சென்றும் சிவப் புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

 

கன்னி:- காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம்.

 

துலாம்:- சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும். அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலாபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

 

விருச்சிகம்:- திருவானைக்காவல், வேலு}ர் ஜலகண்டேஸ் வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.

 

தனுசு:- திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.

 

மகரம்:- காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.

 

கும்பம்:- சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங் களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

 

மீனம்:-வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களுக்கு அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்றும் பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்...

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.