Breaking News :

Saturday, January 18
.

கடன் தொகையை ரொக்கப் பணமாகப் பெற முடியாது - ரிசர்வ் வங்கி


வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 SS விதியின்படி, எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையை ரொக்கப் பணமாகப் பெற முடியாது.

இந்திய ரிசர்வ் வங்கி கடன் விஷயத்தில் தொடர்ச்சியான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்தவகையில் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) ரொக்கமாகக் கடன் அளிக்கும் வரம்புகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, இந்நிறுவனங்கள் ரூ.20,000-க்கு மேல் வாடிக்கையாளர்களுக்கு கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது என்று கூறியுள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வாங்கி அனைத்து வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கும் மே 8-ம் தேதியன்று கடிதம் அனுப்பியுள்ளது.

ரொக்கப் பரிமாற்றத்தில் வருமான வரி விதிகளைக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

அந்த கடிதத்தில்,  ‘வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 269 SS விதியின்படி, எந்த நபரும் 20,000 ரூபாய்க்கு மேல் கடன் தொகையைப் பணமாகப் பெற முடியாது. அதோடு எந்த ஒரு வங்கியல்லாத நிதி நிறுவனமும் ரூ.20,000-க்கும் அதிகமான கடன் தொகையை ரொக்கமாக வழங்கக் கூடாது’ எனக் குறிப்பிட்டுள்ளது.

குறைந்த வட்டியில் கோல்டு லோன், பிசினஸ் லோன், ஹோம் லோன் போன்றவற்றை வழங்கும் ஐஐஎஃப்எல் பைனான்ஸ் நிறுவனம் (IIFL Finance) ரொக்க கடன்களுக்கான சட்டபூர்வ விதிமுறைகளை மீறியதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.