Breaking News :

Sunday, October 27
.

நாகலிங்கப் பூ சிவனுக்கு ஏன்?


வில்வம்’ எப்படி சிவனுக்கு உகந்ததோ அதேபோல நாகலிங்கப்பூவும் சிவனுக்கு மிகவும் பிடித்த பூவாகும்.

இந்த அதிசய மலர் பார்ப்பதற்கு சிவலிங்கத்தின் மீது ஐந்துதலை நாகம் படம் எடுத்து குடை பிடிப்பது போல அமைந்திருக்கும். இதன் காய்கள் பார்ப்பதற்கு பந்துகள் போல இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.

நாகலிங்கப்பூவை வைத்து சிவனுக்கு பூஜை செய்யும் போது பல பிரதோஷங்கள் பூஜை செய்த பலன் கிடைக்குமாம். 21 நாகலிங்கப்பூக்களை பூஜைக்கு கொடுத்துவிட்டு 21 பேருக்கு அன்னதானம் செய்தால் முழுபலனும் கிடைக்கும். இந்த பூ செடியில் பூப்பதில்லை அதற்கு மாறாக வேர்ப்பகுதிக்கு மேலேயும், கிளைப்பகுதிக்கு கீழேயும் தானாக ஒரு கிளையை உருவாக்கி அதில் பூக்கிறது. இந்த பூ கடவுளுக்காக படைக்கப்பட்டது அல்லாமல், இந்த பூவே கடவுளாகும்.

நாகலிங்க பூவிற்கு 21 மகரிஷிகள் தங்கள் தவ ஆற்றலை அளித்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

நாகலிங்கப் பூவை தொட வேண்டும் என்றால் சிவபஞ்சாக்ஷரத்தை 1001 முறை சொன்ன பிறகே தொட வேண்டும். ஒரு நாகலிங்க மரத்தில் ஒரே நாளில் 1000 மலர்கள் வரை பூக்குமாம். நாகலிங்கப்பூவை சிவனுக்கு சூடிய பிறகும் அது வாடினால் நாம் குளித்துவிட்டு தான் அந்த வாடிய மலரையும் தொட வேண்டும்.

என்னதான் வாடியிருந்தாலும், அந்த மலருக்கான சக்தி அதில் அப்படியே இருக்குமாம். காய்ந்த நாகலிங்கப் பூவை ஓடும் ஆற்றில் விடவேண்டும். இந்த மரம் தமிழ்நாட்டில் சில கோவில்களிலும், மேற்கு தொடர்ச்சிமலையிலும் காணப்படுகிறது
சிவ லிங்க பூஜைக்கு உதவக்கூடிய முக்கிய பொருட்களாக வில்வ இலை, தாமரைப்பூ, செவ்வரளிப் பூ வரிசையில் நாகலிங்கப் பூவுக்கும் முக்கிய இடம் வகிக்கிறது.நாக லிங்க பூவை வழங்கிய 21 ரிஷிகளை ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

நீண்ட கால் நோய் தீர சிவமந்திரத்தையும், தேவாரப் பாடல்களையும் பாடி வழிபட வேண்டும்.
நாகலிங்கப்பூவை நுகரும்போது நுரையீரல் தொற்று குணமாகும். இயற்கையாகவே இந்த பூவிற்கு வியர்வை துர்நாற்றத்தை போக்கக்கூடிய சக்தி உண்டு.

இந்த பூவிலிருந்து சாறு எடுத்து வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள். ஆண் மலடு, பெண் மலடு இரண்டையுமே நீங்க கூடிய சக்தி இந்த பூவிற்கு உண்டு. வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு, PCOD ஆகியவை குணமாகும்.

காற்றுமாசு அதிகமாக இருக்கும் இடத்தில் நாகலிங்க மர இலைகள் உதிர்ந்து விடுமாம். அதை வைத்து காற்றிலுள்ள மாசை அறிந்து கொள்ளலாம். நாகலிங்க மலர் செல்வ செழிப்பை தரும், கெட்ட சக்திகளை நீக்கும் என்றும் நம்பப்படுகிறது.

பெரும்பாலும் நாகலிங்க மரத்தை கோவில்களிலேயே அதிகம் காணலாம். இதன் இலைகள் தோல்நோயை குணப்படுத்த பயன்படுகிறது.

இந்த மரத்துடைய பட்டைகள் காய்ச்சலை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த பூக்களிலிருந்து எடுக்கப்படும் தைலம் வயிற்றுக்கோளாறுகளை குணப்படுத்த பயன்படுகிறது. இந்த நாகலிங்க மரத்திலும், பூவிலும் நிறைய மருத்துவ குணம் இருப்பதால், இதை ஒரு அதிசய மரமாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.