Breaking News :

Sunday, October 27
.

முற்பிறவியில் செய்த பாவம் போக்கும் வழி என்ன?


இன்றைய வாழ்க்கையில் பலரும் தங்கள் வாழ்க்கையை மருந்து மாத்திரை என உட்கொண்டே கழிக்கிறோமே ஏன் தெரியுமா?

ஒரு சிறு கதை மூலம் இதனை தெரிந்து கொள்வோம்.

ஒருநாள் ஓருவர் பகவானிடம், பகவானே நான் இப்போதைய இந்த வாழ்க்கையில் டெராமைசின் செப்டோமைசின்
எரித்ரோமைசின் சோப்ரோமைசின்
அப்படின்னு பல மருந்து மாத்திரைகளையே
மாற்றி மாற்றி சாப்பிடுகிறேனே இதற்கு தீர்வு இல்லையா எனக் கேட்டானாம்.

அவனிடம் கடவுள் பிள்ளாய் உன் கேள்வியிலேயே பதில் இருக்கே எனக் கூற,
பகவானே எனக்கு புரியவில்லை என்றானாம்.

உடனே அப்படியா மகனே, நீ தினமும் உட்கொள்ளும் ஓவ்வொரு மருந்திலும் இறுதியில் 'மை சின்' என வருகிறதே கவனிக்கவில்லையா!

அதன் அர்த்தம்... என் பாவம் என்பதே அதாவது நீ முற்பிறவியில் செய்த பாவம்.

எப்போது முற்பிறவியில் செய்த உன்பாவம் ஒரளவு தீருகிறதோ அப்போது இப்பிறவியில் உனக்கு மருந்தும் தேவையில்லை நல்ல விருந்தும் தேவையில்லை.

மகனே சிறிய தலைவலிக்கு கூட அனாசின் மெட்டாசின் என்றே தானே உட்கொள்கிறாய்.

அதெல்லாம் போகட்டும்,அந்த மாத்திரையை மருந்தை எப்படி அழைக்கிறாய் மெடிசின் என்று தானே.

பார்த்தாயா அதிலும்'சின்'(பாவம்) உள்ளதல்லவா.

என்று உனது சின் (பாவம்) தொலைகிறதோ அன்று மெடிசினும் வேண்டாம் மெட்டாசினும் வேண்டாம் உன் சின்போய் என்சன் ஆகிவிடுவாய் என கடவுள் கூறி மறைந்தாராம்.

என்ன நண்பர்களே நமது சின்(முன் பிறவி பாவம்) விரைவில் தொலைந்து கடவுளின் சன் ஆக மாற அவனின் நாமம் என்ற நல்ல மெடிசினை தவறாமல் சொல்வோமா?

இதையே திருமங்கை ஆழ்வார் தன் பாசுரத்தில் அழகாக சொல்லுகிறார்

குலம் தரும்; செல்வம் தந்திடும்; அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரும் செய்யும்; நீள் விசும்பு அருளும்;
அருளொடு பெரு நிலம் அளிக்கும்;
வலம் தரும்; மற்றும் தந்திடும்; பெற்ற
தாயினும் ஆயின செய்யும்;
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
நாராயணா என்னும் நாமத்தின் மூலம் என்ன , என்ன கிடைக்கும்?
உயர்ந்த மேன்மை (குலம்),
செல்வம்
துயர்களைத் துடைக்கும்
நிலம் தரும்
பகவானின் அருளைத் தரும்
சுவர்கம்- வீடுபேறு தரும்
பலம் தரும்
தாயினும் மிஞ்சிய அன்பும் தரும்

இவ்வளவு சிறப்புடைய சொல், நாமம் நாராயணா என்பதைக் கண்டுவிட்டேன்.
திருமங்கை ஆழ்வாரின் பத்து பாடல்களில் ஒரு பாடல்தான் “குலம் தரும்”……………..

 ஏனைய பாடல்களில் அவர் கூறும் நல்ல வாசகங்கள்:

சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்

பொருள்: நனமையே பெற வேண்டும் என்று எண்ணி அதனைப் பெற நல் வினை செய்யாமல் தீவினையே செய்து பெண்களின் அழகையே நாடிக் கழித்த நாட்கள் ஊமை கண்ட கனவினைப் போல வீணாயின.

தஞ்சை கோயில், குடந்தை கோயில் ஆகியனவற்றைப் பாடிவிட்டு பத்தாவது பாடலை அவர் முடிக்கும் அழகே தனி அழகுதான்!

துஞ்சும் போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்
நஞ்சுதாம் கண்டீர் நம்முடைய வினைக்கு ( பாவங்களுக்கு) நாராயணா என்னும் நாமம்.
என்ன நண்பர்களே!

நமது முற்பிறவி பாவங்களுக்கு விஷம் போன்ற மெடிசன் ஆன பகவத் நாமாவை சொல்லி மெடிசின் வேண்டா பெருவாழ்வை பெறுவோமா!

ஓம் நமோ நாராயணா!

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.