Breaking News :

Thursday, May 16
.

ஜாதகப்படி உங்களுக்கு எப்படிபட்ட திருமணம்?


திருமணங்களின் பலவித அமைப்புகள் 

பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் காதல் திருமணம் கலப்புத் திருமணம் வெளி நாடு அன்னிய மதம் திருமணம் ஏகதாரம் இருதாரம் மூன்று தாரம் பல தாரம் போன்ற பலவித திருமண அமைப்புகள் நடைமுறையில் உண்டு.

 

திருமணங்களின் பொதுவான அமைப்புகளுக்கு ஜோதிட ரீதியான அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்பதை சுருக்கமாக காண்போம். அணைத்து அமைப்புகளுக்கும் ***லக்னம் லக்னாதிபதி சுப வலு பெற்று இருக்க வேண்டும்.

 

***அந்தப் பலன்களுக்கு அதன் தொடர்புடைய கிரகங்களின் தசா புத்திகள் நடக்கும் போது தான் பலன்கள் கிடைக்கும் 

 

இவை இரண்டும் அணைத்து பலன்களுக்கும் பொதுவானவை

 

பருவ வயதில் திருமணம்

 

ஜாதகத்தில் குடும்ப ஸ்தானம் எனும் இரண்டாம் இடம் களத்திர ஸ்தானம் என்னும் ஏழாம் இடம் களத்திரக் காரகன்சுக்கிரன் மூன்று அமைப்புகளும் பாவ கிரகங்களின் தொடர்பு இல்லாமல் சுப வலுவாக இருந்தால் இள வயதில் திருமணம் நடைபெறும்

 

தாமதத்திருமணம் 

 

லக்னம் லக்னாதிபதி, சுக்கிரன் 2, 7 ஸ்தானங்கள் அதிபதிகள் பாவர்கள்சனி, ராகு, கேது, செவ்வாய் தொடர்புடன் பாதிக்கப்பட்டிருந்தால் தாமதத் திருமணம் ஏற்படும்

 

நிச்சயிக்கப்பட்ட திருமணம் 

 

லக்னம் 2 ஏழாம் இடங்கள் அதிபதிகள் சுக்கிரன் பாவ கிரகங்களின் தொடர்பு இல்லாமல் சுப வலுவாக ஜாதகத்தில் அமைந்திருந்து அதன் தொடர்புடைய தசைகளும் உரிய வயதில் நடந்தால் பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெறும்.

 

காதல் திருமணம்

 

காதல் ஏற்பட பூர்வ பந்தம் ஜாதகத்தில் இருக்க வேண்டும்.

 

பூர்வ ஜென்மம் முன் ஜென்மம் என கூறப்படும் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடம் காதலுக்கு முக்கியமான இடமாகும் எனவே இந்த ஸ்தானம் , அதிபதி சுப வலுவாக இருப்பதும் காதலுக்கு வழிவகுக்கும்.

 

 சுக்கிரன் பலமாக இருப்பதும் காதலுக்கு காரணியாக அமையும்.

 

ஐந்து ஏழாம் அதிபதித் தொடர்புகள் எளிதில் காதல் கை கூடும் அமைப்பாகும்.

 

மேலும் பல துணை விதிகளும் உண்டு காதல் என்பது மனம் தொடர்பான உணர்வாகையால் மனோக் காரகன் சந்திரனையும் ஆராய்வது அவசியமாகும் அடுத்து சுக்கிரனின் ரிஷபம் துலாம் ராசிகளையும் அதில் அமர்ந்துள்ள கிரகங்களையும் ஆராய்ந்து அறிவது சிறப்பாகும் மேலே கூறியுள்ள ஸ்தானங்கள் அதிபதிகள் சுக்கிரன்மற்றும் சுக்கிரன் வீடுகள் சுபத்துவ வலுப்பெற்று இருந்தால் காதல் திருமணம் ஏற்படும் காதல் கைகூடும்.

பாவத்துவமாக இருந்தால் காதல் முறிவுகள் ஏற்படும்.

 

முக்கிய நிலையாக தசாபுத்தி அமைப்பும், கோச்சாரங்களையும் கலந்துதான் பலன்களை உறுதி செய்ய வேண்டும்

திரிகோண, கேந்திர அதிபதிகளின் திசைகள் சுப வலுவாக இருந்து திசைகள் நடக்கும் போது கோச்சாரத்தில் குரு பலம் போன்ற சுப நிலைகளில் செனியின்அசுப நிலைகள் இல்லாமல்  இருக்கும்போது உருவாகும்காதல்கள் திருமணத்தில்முடியும்.

 

6 ,8 ,12 தசா புத்திகளும், கோச்சாரத்தில் ஏழரைச்சனியில்ஜென்மச்சனி அஷ்டம சனி போன்ற சனியின் அசுப நிலைக் காலங்களிலும் உருவாகும் காதல் தடைபடும் முறிந்து விடும்.

 

கலப்புத் திருமணங்கள்

 

 லக்னம் 7 மிடம் அதிபதிகள் சுக்கிரன் பாவக்கிரகங்களின் தொடர்புகள் இருக்கும்போது அதன் அதிபதிகளும் மறைவஸ்தானங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுஇருந்தால் கலப்புத் திருமணங்கள் நடைபெறும்.

 

வேற்று மதம் நாடு

 

லக்கனம் , லக்னாதிபதி, சுக்கிரன் 7மிடம் ஏழாம் அதிபதி இவர்களுடன்ராகு கேதுக்கள் தொடர்பு பெற்று அவர்களின் தசா புத்திகளும் நடப்பில் திருமண வயதில் வருமானால் அந்நிய இனம் நாடு மதம் சார்ந்த கணவன் மனைவி அமைவார்கள்

 

கள்ளத் தொடர்பு

 

வேலாமிடம் ஏழாம் அதிபதி சுக்கிரன்,

 சனி ராகு செவ்வாய் பாவர்களுடன் மறைவு ஸ்தானங்களிலும் அமர்ந்திருந்தால் மூன்று,பதினொன்றாம் அதிபதி ஏழாம் அதிபதியை விட வலுப்பெற்று இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடர்புகள் ஏற்படும்.

 நடப்பு தேசா புத்திகள் ஆய்வு மிக அவசியமாகும்.

 

இரண்டாம் தாரம்

 

ஏழாம் அதிபதியை விட 11 ஆம் அதிபதி வலுப்பெற்று குடும்பஸ்தானம் குடும்ப அதிபதி வலுவுடன் இருந்தால் பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு உள்ள கிரகங்களின் தெசா புத்திகளில் இரண்டாவது திருமணம் நடைபெறும் 

#மூன்றாம்திருமணம் 7, 11 ஆம் அதிபதிகளை விட மூன்றாம் அதிபதி வலுப்பெற்று  குடும்பஸ்தானம் வலுவாக இருந்தால் மூன்றாம் இடத்தில் தொடர்பு கொண்ட கிரகங்களின் தசா புத்திகளில் மூன்றாம் திருமணம் அமையும் 

 

பலதார அமைப்பு 

 

குடும்பம் தானம் எனப்படும் இரண்டாம் வீடும் அதிபதியும் பாவத்துவம் பெற்று சுக்கிரன் வலுப்பெற்று 3,7, 11மிடங்கள் அதிபதிகள் பாவத்துவமுடன் இருந்தால்பலதார திருமணங்கள் நடைபெறும்.

 

இதற்கு மேல் ஆண்கள் பெண்கள் தொடர்பான காதல் காமம் உனர்வுகளைப் பதிவில் கூறுவது சிறப்பல்ல

 

உங்கள் ஜோதிடர் மு மாணிக்கம் 

ப‌ . வேலூர் 7010363521/9789233429

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.