உங்கள் ராசிப்படி குலதெய்வம் எது?

rasi-kula-deivam
உங்கள் ராசிப்படி குலதெய்வம் எது?

ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். உங்கள் ராசிப்படி உங்களுக்கு எந்தக் கடவுள் குலதெய்வமாக இருக்கிறார் என பார்ப்போம்.....

 

ஒருவர் அனுபவிக்கும் எல்லா பலன்களும் நாமும், நம் முன்னோர்களும் செய்த பாவ, புண்ணியத்தின் அடிப்படையிலேயே கிடைக்கிறது. ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களையும் பித்ரு பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் காவல் தெய்வங்களான உங்கள் குலதெய்வம் தீர்க்கும்.

 

 குலதெய்வம் என்பது உங்கள் குலத்தில் தோன்றிய உங்கள் முன்னோர்களாகக் கூட இருக்கக்கூடும். எந்த ஒரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு கஷ;டம் எனில், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கூப்பிடாமலேயே கூட வந்து உங்களுடைய துக்கங்களை போக்குவது உங்கள் குலதெய்வமே.

 

 நீங்கள் ஒருவேளை குலதெய்வ வழிபாட்டை மறந்து இருந்தால், முதலில் மீண்டும் தொடங்குங்கள். வேறு எந்த தெய்வமும் அதற்கு இணை இல்லை. உங்களது குலதெய்வ கோவிலுக்கு மாதம் ஒருமுறை கண்டிப்பாக சென்று வரவேண்டும். 

 

ஒவ்வொரு ராசிக்குரிய குலதெய்வங்கள் :

 

மேஷம் - மதுரைவீரன்

 

ரிஷபம் - ஐயனார்

 

மிதுனம் - காளியம்மன்

 

கடகம் - கருப்பண்ணசாமி

 

சிம்மம் - வீரபத்திரன்

 

கன்னி - அங்காளம்மன்

 

துலாம் - முனீஸ்வரன்

 

விருச்சிகம் - பெரியாச்சி

 

தனுசு - மதுரைவீரன்

 

மகரம் - ஐயனார்

 

கும்பம் -  காளியம்மன்

 

மீனம் - மதுரைவீரன்

 

இவையாவும் பொதுப் பலன்களே ஆகும்.