இன்றைய ராசி பலன்கள் - (23-11-2026 திங்கள் கிழமை)

today-rasi-palangal
இன்றைய ராசி பலன்கள் - (23-11-2026 திங்கள் கிழமை)

மேஷம்
உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பலம் கூடும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்யோகத்தில் கவனம் தேவை.

ரிஷபம்
உங்கள் செயல் திறன் அதிகரிக்கும்.வெளிவட்டார தொடர்பு விரிவடையும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்று சேருவர். தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.

மிதுனம்
மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்.குழப்பம் தீரும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். பழைய சொந்த, பந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்

கடகம்
குடும்பத்திற்கு நன்மையான விஷயங்கள் நடக்கும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மறைமுக பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

சிம்மம்
குடும்பத்திற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

கன்னி
குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். திட்டமிட்ட காரியம் கைகூடும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது தொழில் யோகம் அமையும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

துலாம்
அலைச்சல் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். ஆன்மீக நாட்டம் கூடும். முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்

விருச்சிகம்
எதிர்பாராத பயணங்களால் நல்ல திருப்பம் ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

தனுசு
உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். கையில் எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். பண வரவு இருக்கும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.
தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.

மகரம்
குடும்பத்தில் சுக வாழ்வு ஏற்படும். பெற்றோர்கள் கேட்டதை செய்து தர இயலும். புது நண்பர்களால் சில தொந்தரவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
வெளியூர் பயணங்களால் ஆதாயம் பெறுவீர்கள்.

கும்பம்
முக்கிய நிகழ்வுகள் நினைவுக்கு வரும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.பகைவர்கள் அடிபணிந்து பணிந்து போவர். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.

மீனம்
யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.