கார், ஏசி உள்ளவர்கள் ரேஷன் கார்டு ரத்தா? - மத்திய அரசு அதிரடி.
கார், ஏசி உள்ளவர்கள் ரேஷன் கார்டு ரத்தா? - மத்திய அரசு அதிரடி
ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும், மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ரேஷன் கார்டு என்பது உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு மட்டுமின்றி, அரசின் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் உதவிகளைப் பெறுவதற்கும் முக்கிய ஆவணமாக உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் தகுதியற்ற நபர்கள் பயன்பெறுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா (PMGKAY) திட்டத்தின் கீழ் தகுதியற்ற சிலரும் பலனடைந்து வருவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை நடத்திய ஆய்வில், கார் மற்றும் ஏசி வசதி கொண்டவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்கள் உள்ளிட்ட சிலரும் இலவச ரேஷன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருவது தெரியவந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, அரசு நிர்ணயித்த தகுதி விதிமுறைகளுக்கு உட்படாத பயனாளிகளைக் கண்டறிந்து, அவர்களுடைய ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களுடைய குடும்ப விவரங்கள் மற்றும் தகுதி தொடர்பான தகவல்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியமாகும்.