அனிருத் திருமண வரவேற்பில் சிம்பு, நயன்தாரா சந்திப்பு வைரல்!.
அனிருத் திருமண வரவேற்பில் சிம்பு, நயன்தாரா சந்திப்பு வைரல்!
அனிருத் – காவியா மாறன் திருமண வரவேற்பு விழாவில் திரையுலகம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஏற்கனவே அஜித் – ஷாலினி தம்பதியரின் வருகை கவனம் பெற்றிருந்த நிலையில், தற்போது மற்றொரு சுவாரஸ்யமான சந்திப்பு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த விழாவில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவும் பங்கேற்றிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நிகழ்ச்சியில் சந்தித்துக்கொண்ட சிம்பு, நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் எந்தவித சங்கடமும் இன்றி இயல்பாகப் பேசிக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பு தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.
மூவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது, அருகில் இருந்த இயக்குநர் நெல்சன் ஆச்சரியத்துடன் பார்ப்பது போன்ற அவரது ரியாக்ஷனும் கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சியைப் பகிர்ந்து வரும் இணையவாசிகள், பல்வேறு மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவரவர் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்குச் சென்ற பிறகு பொது நிகழ்ச்சிகளில் சந்திக்கும்போது இயல்பாகப் பேசிக்கொள்வது நல்ல அணுகுமுறை எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பழைய விஷயங்களை மீண்டும் கிளறிப் பேசுவதற்குப் பதிலாக, பிரிவுக்குப் பிறகும் பரஸ்பர மரியாதையுடன் நடந்துகொள்வது முதிர்ச்சியின் அடையாளம் என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.