கோடைக்காலம் வந்துவிட்டது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிவிடும். இந்தக் கொடுமையில் இருந்து நம் அனைவரும் குளிர்பானங்களை தேடி ஓட்டம் எடுப்போம்.
அவற்றில் பழச்சாறு, மோர், பாதாம்பால், ரோஸ்மில்க், லஸ்சி,கோக், மிராண்டா, சர்பத் என குளிர்பானங்களை அடுக்கிக் கொண்டே இருக்கலாம். ஆனால், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் பானம் சர்பத்தான். இந்த சர்பத்தை நம் வீடுகளில் எப்படி தயாரிக்கலாம் இதோ வாங்க பார்ப்போம்....
தேவையான பொருட்கள்:
சீனி—600 கிராம்
தண்ணீர்—300 மிலி
சிட்ரிக் ஆசிட்—ஒன்றரை ஸ்பூன்
லெமன் யெல்லோ கலர்—1/2 ஸ்பூன்
நன்னாரி எசன்ஸ்—4 ஸ்பூன்
செய்முறை:
சீனி,தண்ணீர்,சிட்ரிக் ஆசிட்,மூன்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்து அடுப்பில் வைத்து கரையும் வரை சூடு படுத்தவும்.கொதிக்க வைக்க வேண்டாம்.
ஆறியவுடன் வடிகட்டி,எசன்ஸ் மற்றும் கலரை சேர்த்து சுத்தமான பாட்டிலில் அடைக்கவும். சிட்ரிக் ஆசிட், கலர், எசன்ஸ் இவையனைத்தும் எசன்ஸ் கடைகளில் கிடைக்கும்.
ரோஸ், பைன் ஆப்பிள், ஆரஞ்ச் என்று வெவ்வேறு எசன்ஸை ஊற்றினால் வெவ்வேறு சர்பத் ரெடி.திராட்சை சர்பத்திற்கு டொனொவின் என்ற எசன்ஸை ஊற்றவும்.