Breaking News :

Monday, March 20

புண்ணியம் தரும் கோமாதா வழிபாடும்

இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுகின்றனர். 

இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்கடைந்த
போது பாற்கடலில் இருந்து ஐந்து பசுக்கள் வெளிப்பட்டன. 

அவை நந்தா, பத்திரை, சுரபி, சுசீலை, சுமனை ஆகியவை. 

இவை பொன்னிறம், கருமை, வெண்மை,புகை, சிவப்பு நிறம் கொண்டிருந்தன. 

இவற்றின் சந்ததிகளே பூலோகத்தில் நமக்கு உதவியாக இருந்து வருகின்றன.

இவற்றில் இருந்துவரும் கோமயம்(சாணம்)கோமூத்திரம்
(கோமியம்),பால், தயிர், வெண்ணெய் ஆகிய ஐந்தும் புனிதமானவை. 

இவற்றை குறிப்பிட்ட அளவில் கலந்து சிவபெருமானுக்கு
 செய்யும் அபிஷேகமே
பஞ்சகவ்ய அபிஷேகம் எனப்படுகிறது. 

இப்பசுக்களில் மும்மூர்த்திகள், சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர்.

செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்
(பின்பாகம்) வசிக்கிறாள்.

இப்பகுதியை தொட்டு வழிபட்டால் முன்ஜென்ம பாவங்கள் விலகும். 

காலையில் எழுந்ததும் பசுவைத் தொழுவத்தில் காண்பது சுபசகுனம்

தெருக்களில் கூட்டமாகப் பார்த்தால் இன்னும் விசேஷம். 

பாற்கடலில் பிறந்த ஐந்து பசுக்களும் கோலோகம்
என்னும் பசுவுலகில் இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.

பசுவைத் தெய்வமாக வழிபட்டால்கோலோகத்தை
அடையும் பாக்கியம் உண்டாகும்

வைகுண்டம்’ ஸ்ரீமன் நாராயணனின் வாசஸ்தலம்.

வைகுண்டத்திற்கும்  ஊர்த்தவ பாகத்தில் விளங்குவது கோலோகம்.

கோமாதாவின் உடற் பகுதியும்   அங்கே அருளும் தெய்வங்களும்

1. முகம் மத்தியில்                       சிவன்
2. வலக் கண்                               சூரியன்
3. இடக் கண்                               சந்திரன்
4. மூக்கு வலப்புறம்                     முருகன்
5. மூக்கு இடப்புறம்                     கணேசர்
6. காதுகள்                                    அஸ்வினி குமாரர்
7. கழுத்து மேல்புறம்                     ராகு
8. கழுத்து கீழ்புறம்                        கேது
9. கொண்டைப்பகுதி                     ப்ரும்மா
10. முன்கால்கள் மேல்புறம்      சரஸ்வதி,        விஷ்ணு
11. முன்வலக்கால்                  பைரவர்      
12. முன் இடக்கால்                     ஹனுமார் 
13. பின்னங்கால்கள்                     பராசரர், விஷ்வாமித்திரர்
14. பின்னகால் மேல்பகுதி            நாரதர், வசிஷ்டர்
15. பிட்டம் - கீழ்ப்புறம்                கங்கா
16. பிட்டம் - மேல்புறம்                லக்ஷ்மி
17. முதுகுப்புறம்                       பரத்வாஜர், குபேரர் ,வருணன்,அக்னி    
18. வயிற்றுப்பகுதி        சனககுமாரர்கள் பூமாதேவி
19. வால் மேல் பகுதி                  நாகராஜர்
20. வால் கீழ்ப்பகுதி                 ஸ்ரீமானார்
21. வலக்கொம்பு                            வீமன்
22. இடக்கொம்பு                          இந்திரன்
23. முன்வலக்குளம்பு         விந்தியமலை
24. முன்இடக்குளம்பு               இமயமலை
25. பின் வலக்குளம்பு           மந்திரமலை
26. பின் இடக்குளம்பு        த்ரோணமலை
27. பால்மடி                           அமுதக்கடல் 

கோமாதாவில் (பசு) முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம். 

அதன் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் 
செய்வதாக ஐதீகம்

எனவே, கோமாதா பூஜை செய்யும் போது,பசுவை முன்புறமாக தரிசிப்பதைவிட பின்புறம் தரிசனம் செய்வது மிகவும் நன்மை தரும். 

பசுவை வணங்கும்போது முன்நெற்றி மற்றும் வால் பகுதியில்சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.

பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும்.

எனவேதான், அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள்.

பசுவுக்கு பூஜை செய்வது பராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.

பிரம்மா,விஷ்ணு,சிவன் முதலான மும்மூர்த்திகளின் மேலதிகாரியாக சதாசிவம்
என்றொரு தெய்வம் உண்டு.

சதாசிவத்திற்கும் மேலதிகாரியாக 
திருமூர்த்தி இருக்கிறார்.

இவர்களுக்கும் மேலாக 
10 வயது சிறுமியாக மனோன்மணி என்ற 
ஆதிபரப்பிரம்ம சக்தி இருக்கிறாள்

இவளேஇந்தபிரபஞ்சம்,உலகம்,உயிர்கள்,என அனைத்தையும்
படைத்து,காத்து,ரட்சிப்பவளாக இருக்கிறாள்

இவளின் எளிய அம்சமாக பசு என்ற கோமாதா நம்முடன் வாழ்ந்து வருகிறாள்.

இதனாலேயே,முப்பத்து
முக்கோடி தேவர்களும்
நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும்,அஷ்டவசுக்களும்,
நவக்கிரகங்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றன.

கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம்.

எந்த ஜாதி,மதம்,மொழியும் தடையாக இராது.

(உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட 
கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்)

கோபூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கிவிடும்.

குழந்தைபாக்கியம் உண்டாகும்.

கெட்ட சக்திகள் நெருங்காது.

நீண்ட கால மனக்குறைகள் நீங்கிவிடும்.

கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும்,நம்பிக்கையும் முக்கியமாகும்.

முதலில் பசுவை அழைத்துவர வேண்டும்அதன் மீது பன்னீர் தெளித்துமஞ்சள்,குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும். 

பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.

பிறகு பசுவிற்கு புடவை அல்லது ரவிக்கை சாற்றி,அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.

நெய்விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுக்க வேண்டும்

ஆரத்தி காண்பித்து விட்டு,விழுந்து வணங்க வேண்டும்.

கோமாதா 108 போற்றியை பக்தியுடன் ஒருவர் மனதை ஒருமுகப்படுத்திச் சொல்ல வேண்டும்.(இடையில் நிறுத்தக்கூடாது)

மற்றவர்கள் “போற்றி”, “ஓம்” என சொல்லிட வேண்டும்.

108 போற்றி முடித்தவுடன்

மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் கோமாதாவக 
ஆரத்தி செய்ய வேண்டும் 

பிறகு,3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.

இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும்
பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை
வணங்கிய பலனும்
ஒரு சேரக்கிடைக்கும்.

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.