மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தற்போது மத்திய அரசை குறிப்பிடும்போது, ’ஒன்றிய அரசு’ என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒன்றிய என்ற சொல்லே சரியானது என கூறியுள்ளார்.
”அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா #UnionOfStates என்றே வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா. ஒன்றியம் என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியிருக்கிறது. அதனால்தான் பயன்படுத்துகிறோம் - பயன்படுத்துவோம் – பயன்படுத்திக்கொண்டே இருப்போம்.” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.