சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இண்டியன்ஸ் அணி அபார வெற்றிப் பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இன்று (01/05/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 219 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 72, டூ பிளஸிஸ் 50, மொயீன் அலி 58, ரவீந்திர ஜடேஜா 22, ரன்களை எடுத்தனர். அதேபோல், மும்பை இண்டியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக பொல்லார்ட் 87, ரோஹித சர்மா 35, குருணால் பாண்டியா 32 ரன்களை எடுத்தனர்.
இந்த போட்டியில் வெற்றிப் பெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் மும்பை இண்டியன்ஸ் அணி 8 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.